பஜாஜ் பல்சர் 135LS பைக்கில் புதிய வைன் ரெட் நிறம்

புதிய காக்டெயில் வைன் சிவப்பு நிறத்தில் பஜாஜ் பல்சர் 135LS பைக் மாடலை விலையில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  பஜாஜ் பல்சர் 135LS விலை ரூ. 59,631 ஆகும்.

bajaj-pulsar-135-color-red

காக்டெயில் ரெட் வைன் வண்ணத்தினை பஜாஜ் வி15 , பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ் போன்ற மாடல்களும் பெற்றுள்ள நிலையில் பல்சர் 135 எல்எஸ் பைக்கும் எவ்விதமான கூடுதல் விலை உயர்வும் இல்லாமல் வந்துள்ளது. ரெட் வைன் வண்ணத்தினை தவிர முந்தைய வண்ணங்களான நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் தொடரும்.

பல்சர் 135LS பைக்கில் 13.37 hp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 134.66 சிசி DTS-i என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 11.4 Nm ஆகும். மேலும் இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. பல்சர் 135 எல்எஸ் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 68.1 கிமீ மைலேஜ் பெற்றுள்ளது.

பைக்கின் முன்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் பின்பக்க டயரில் 130மிமீ டிரம் பிரேக் பெற்றுள்ளது.

பஜாஜ் பல்சர் 135LS  விலை ரூ.59,631 ( தமிழக எக்ஸ்ஷோரூம் )