பஜாஜ் பல்சர் NS 160 பைக் விலை ரூ.82,000

0

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் சீரிஸ் பைக்குகளல் புதிய மாடலாக பஜாஜ் பல்சர் NS 160 ஜூலை மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டீலர்களுக்கு பல்சர் என்எஸ் 160 பைக் வரத் தொடங்கியுள்ளது.

bajaj pulsar ns 160

Google News

பஜாஜ் பல்சர் NS 160 பைக்

160சிசி நேக்டு ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் இடம்பெற உள்ள புதிய பல்சர் மாடல் துருக்கி மற்றும் நேபால் போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. துருக்கியில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலின் 160.3 சிசி என்ஜின் மாடல் 15.5 பிஎஸ் சக்தியை வெளிப்படுத்தி 14.6 என்எம் டார்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் ஆற்றலை எடுத்து செல்ல 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Bajaj Pulsar 160NS side view

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய பல்சர் 160 என்எஸ் மாடலில் முன்புற டயர்களுக்கு டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயர்களுக்கு டிரம் பிரேக் வழங்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை கொண்டதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

Bajaj Pulsar 160NS engine

புதிய பல்சர் என்எஸ் 160 மாடல் சுசுகி ஜிக்ஸெர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, ஹோண்டா சிபி ஹார்னெட் 160 மற்றும் யமஹா FZ-S போன்ற மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் விற்பனைக்கு வரவுள்ளது.

பல்சர் என்எஸ்160 விலை

ரூ. 82,000 விலையில் பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதிகார்வப்பூர்வமான அறிவிப்பு ஜிஎஸ்டி வருகைக்கு பின்னர் அறிவிக்கப்படலாம்.

Bajaj Pulsar 160NS rear viewBajaj Pulsar 160NS badge

Bajaj Pulsar 160NS