பஜாஜ் வி12 பைக்கின் டிஸ்க் பிரேக் வேரியன்ட் அறிமுகம்

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மெட்டல்  பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு வரும் பஜாஜ் வி வரிசை பைக்கில் இடம்பெற்றுள்ள பஜாஜ் வி12  பைக்கில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மாடல் ரூபாய் 60,168 விலையில் வெளிவந்துள்ளது.

பஜாஜ் வி12 டிஸ்க்

வி சீரிஸ் பைக்குகளின் தோற்றத்திலே அமைந்துள்ள வி12 பைக்கில் 10.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 125 DTS-i எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.. இதன் டார்க் 11 நியூட்டன் மீட்டர் ஆகும். இதன் முன்பக்கத்தில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் பின்பக்கத்தில் 16 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் இரண்டு ஸ்பிரிங் கொண்ட சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. இரு டயரில் 130 மீமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் டியூப்லெஸ் டயர்களுக்கு பதிலாக ட்யூப் டயர் பொருத்தப்பட்டுள்ள வி12 பைக்கில் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது.

bajaj v15 headlight

Bajaj V12 Specifications

என்ஜின் 124.5 சிசி
ஆற்றல்  10.07 ஹெச்பி @ 8500 rpm
டார்க்  10.9 என்எம் @ 6500 rpm
கியர்பாக்ஸ்  5 வேகம் – 1-N-2-3-4-5
மைலேஜ்  55 Kmpl (ARAI)
டாப் ஸ்பீடு 110கிமீ
 நீxஅxஉ 2040X785X1066 மிமீ
டேங்க்  13 லிட்டர்
வீல்பேஸ்  1315மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ்  164மிமீ
முன் டயர்  2.75-18
பின் டயர் 100/90-16
முன் பிரேக்  டிஸ்க் 240மிமீ/ டிரம் 130 மிமீ
பின் பிரேக்  டிரம் 130 மிமீ
முன் சஸ்பென்ஷன்  டெலிஸ்கோபிக்
பின் சஸ்பென்ஷன்   ட்வீன் ஷாக் அப்சார்பர்

bajaj v15 bike white sideview

ஹீரோ கிளாமர் , ஹோண்டா சிபி ஷைன் போன்ற மாடல்களுக்கு சவாலாக விற்பனை செய்யப்படுகின்ற பஜாஜ் V12 டிஸ்க் பிரேக் வேரியன்ட் விலை ரூ.60,168 ஆகும்.

(தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை)