பல்சர் 200ஏஎஸ் பைக் விற்பனைக்கு வந்தது – முழுவிபரம்

0
பஜாஜ் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பல்சர் வரிசையில் பல்சர் 200ஏஎஸ் பைக் ரூ.91,500 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பல்சர் 200ஏஎஸ் பைக்

பல்சர் 200ஏஎஸ் பைக்கில் 23.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 199.5சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 18.35என்எம் ஆகும். 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்பாகத்தில் பல்சர் 150ஏஎஸ் பைக் போன்றே முன்புறம் குவாட்டராக அலங்கரிக்கப்பட்டுள்ளது.  முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தியுள்ளனர்.

பல்சர் 200என்எஸ் பைக் அலங்கரிக்கப்படாமல் இருக்கும் , பல்சர் 200ஏஎஸ் கொஞ்சம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பல்சர் 200ஆர்எஸ் முழுதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பல்சர் 200AS பைக்கில் மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை சிகப்பு , நீலம் , மற்றும் கருப்பு ஆகும்.

AS என்றால் Adventure Sports ஆகும்.

பஜாஜ் பல்சர் 200ஏஎஸ் பைக் விலை

பல்சர் 200ஏஎஸ் விலை ரூ.91,500 (ex-showroom, Delhi)

மேலும் வாசிக்க

பல்சர் 150ஏஎஸ் பைக் விபரம்

பல்சர் 200ஆர்எஸ் பைக் விபரம்

Bajaj Pulsar 200AS launched , priced at Rs.91,500 (200AS- 200 Adventure Sports)