புதிய பஜாஜ் வி12 பைக் விற்பனைக்கு வந்தது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வி அணிவரிசையில் புதிதாக பஜாஜ் வி12 என்ற பெயரில் 125சிசி என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் ரூ.57,748 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. V15 பைக்கின் வடிவ தாத்பரியங்களை பெற்ற மாடலாக V12 விளங்குகின்றது.

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானதாங்கி போர்க்கப்பலின் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கும் வி வரிசை பைக்குகளில் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட வி15 பைக் அபரிதமான சந்தையை பெற்றுள்ள நிலையில் குறைந்த 125சிசி கம்யூட்டர் வரிசை பைக்கின் போட்டியாளராக வி12 வந்துள்ளது. V15 பைக்கின் வடிவமைப்பினை பொருத்தவரை விற்பனையில் உள்ள வி15 பைக்கின் தோற்றத்திலே அதே போன்ற பேட்ஜ் ,வண்ணங்களை பெற்றுள்ளது.

 பஜாஜ் V12 என்ஜின்

10.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 125 DTS-i எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.. இதன் டார்க் 11 நியூட்டன் மீட்டர் ஆகும். இதன் முன்பக்கத்தில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் பின்பக்கத்தில் 16 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் இரண்டு ஸ்பிரிங் கொண்ட சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. இரு டயரில் 130 மீமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் டியூப்லெஸ் டயர்களுக்கு பதிலாக ட்யூப்டயர் பொருத்தப்பட்டுள்ள வி12 பைக்கில் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது.

பஜாஜ் வி12 பைக் விலை

பஜாஜ் வி12 பைக் விலை ரூ. 57,748 (தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை)

[foogallery id=”14404″]