மஹிந்திரா செஞ்சூரோ பைக் அறிமுகம்

0
மஹிந்திரா நிறுவனம் இருசக்கர வாகன பிரிவில் சிறப்பான வளர்ச்சி பாதையில் பயணித்து வருகின்றது. இன்று விற்பனைக்கு வந்த மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் விலை ரூ.45,000 ஆகும்.

4 விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ள செஞ்சூரோ முதற்கட்டமாக டாப் வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது.  திருட்டினை தடுக்கும் வகையில் இந்த பைக்கில் பாதுகாப்பு ஆலாரம் மற்றும் என்ஜின் இம்மொபைல்சர் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மஹிந்திரா செஞ்சூரோ பைக்

106.7சிசி  எம்சிஐ-5 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இதன் ஆற்றல் 8.5 எச்பி மற்றும் 8.5 என்எம் டார்க் ஆகும்.

மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 85.4(ARAI) ஆகும்.

இந்தியாவிலே முதன்முறையாக பல வசதிகளை மஹிந்திரா செஞ்சூரோ பைக்கில் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக கீயில் சின்ன விளக்கு, இரவில் வாகனத்தை பார்க்கிங் செய்துவிட்டு நகரும் பொழுது சிறிய தூரத்துக்கான பாதை காட்டும் விளக்குகள் (Guide Me Home Lamp), மற்றும் இருளான இடங்களில் பார்க்கிங் செய்திருந்தால் வாகனத்தினை எளிதாக கண்டுபிடிக்க விளக்குகள்(Find Me Lamp) போன்ற வசதிகள் உள்ளன.

மஹிந்திரா செஞ்சூரோ பைக்

5 வருட வாரண்டியுன் மஹிந்திரா செஞ்சூரோ பைக்கள் கிடைக்கும். ட்ரம் பிரேக்களை மட்டுமே கொண்டிருக்கும். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வசதிகளை கொண்டுள்ள மஹிந்திரா செஞ்சூரோ சிறப்பான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் மட்டும் கிடைக்கும்.

ஹீரோ பேசன் ப்ரோ மற்றும் ஹோண்டா ட்ரீம் யுகா போன்ற பைக்களுக்கு செஞ்சூரோ மிக பெரும் சவாலாக விளங்கும்.

மஹிந்திரா செஞ்சூரோ பைக் விலை

மஹிந்திரா செஞ்சூரோ விலை ரூ.45,000 (டெல்லி எக்ஸ்ஷோரூம்)