2017 ஹார்லி டேவிட்சன் இந்தியா மாடல்கள் அறிமுகம்

0

அமெரிக்காவின் பிரபலமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் அணிவரிசையில் இந்தியாவில்  தி ரோட்ஸ்டெர் மற்றும் ரோட்கிளைட் ஸ்பெஷல் பைக்குகளுடன் 2017  ஹார்லி டேவிட்சன் பைக்குகளும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

புதிதாக வந்துள்ள  தி ரோட்ஸ்டெர் மற்றும் ரோட்கிளைட் ஸ்பெஷல் பைக்குகளை தவிர விற்பனையில் உள்ள மற்ற பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாகவும் மற்றும் சிறிய அளவிலான தோற்ற மாற்றங்களையும் பெற்ற  2017 ஹார்லி டேவிட்சன்  ஸ்டீரிட் , ஸ்போர்ட்ஸ்டெர் , டைனா , சாஃப்டெயில் மற்றும் டூரிங் பைக்குகளில் கிடைக்கும். மேலும் டூரிங் ரக மோட்டார்சைக்கிள்களில் மில்வாக்கி-எயிட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் டூரிங் ரக மோட்டார்சைக்கிள்களில் ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் , ரோட் கிளைட் ஸ்பெஷல் மற்றும் ரோட் கிங் பைக்குகளில் மில்வாக்கி-எயிட் 107 (1745சிசி) சிங்கிள் கேம் வி-ட்வின் எஞ்சினை பெற்றுள்ளது.

மில்வாக்கி-எயிட் 114 (1870சிசி)  வி-ட்வின் எஞ்சினை சிவிஓ லிமிட்டேட் மாடல் பெற்றுள்ளது

ஹார்லி டேவிட்சன் தி ரோட்ஸ்டெர்

தி ரோட்ஸ்டெர் பைக்கில் வி-ட்வின் 1200சிசி  எஞ்சினை பெற்று வெளிப்படுத்தும்டார்க் 96Nm ஆகும். ஆற்றல் விபரங்கள் வெளியிடப்படவில்லை.இதே எஞ்சின் 1200 கஸ்டம் பைக்கிலும் இடம்பெற்றுள்ளது. ஸ்போர்ட்ஸ்டெர் வகையை சார்ந்த தி ரோட்ஸ்டெர் பைக்கின் விலை ரூ.9.70 லட்சம் ஆகும்.

ஹார்லி டேவிட்சன் ரோட்கிளைட் ஸ்பெஷல்

ரூ.32.81 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ள ரோட்கிளைட் ஸ்பெஷல் பைக்கில் 150 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்தும் மில்வாக்கி-எயிட் 107 (1745சிசி) சிங்கிள் கேம் வி-ட்வின் எஞ்சினை பெற்றுள்ளது. இதில் 6.5 இன்ச் தொடுதிரை இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் 6.5 ஜிடி பூம் ஆடியோ சிஸ்டம் பெற்றுள்ளது.

2017 ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750

புதிய மேம்படுத்தப்பட்ட ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750 பைக் மாடலில் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டு இரு புதிய வண்ண கலவைகள் சேர்க்கப்பட்டு ரூ.4.91 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 13 மோட்டார்சைக்கிள் மாடல்களை 23 டீலர்கள் வாயிலாக விற்பனை செய்து வருகின்றது. தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை நகரங்களில் ஹார்லி டேவிட்சன் விற்பனையகங்கள் உள்ளது.