ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் விற்பனைக்கு வந்தது

ஹோண்டா CD 110 பைக்கில் புதிய ட்ரீம் டீலக்ஸ் வேரியண்டினை  ரூ.46,197 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் CD 110 ட்ரீம் டீலக்ஸ் பார்வைக்கு வந்தது.

Honda-CD-110-Dream-Deluxe-bike

புதிய வண்ணம் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் ஆப்ஷனை பெற்றுள்ள சிடி 110 பைக்கில் கருப்பு  மற்றும் பச்சை வண்ணத்திலான ஸ்டிக்கர்களை பெற்றுள்ளது. இது தவிர மூன்று மற்ற வண்ணங்களிலும் சிடி 110 டீலக்ஸ் கிடைக்கும்.

8.25 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 110 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 8.63 Nm ஆகும். இதில் ஹோண்டாவின் ஹெச்இடி நுட்பத்தினை பெற்றுள்ளதால் CD 110 ட்ரீம் டீலக்ஸ்  பைக் மைலேஜ் லிட்டருக்கு 74 கிமீ தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க ; ஹோண்டா நவி மோட்டார்சைக்கிள் விலை விபரம்

சாதரன CD 110 ட்ரீம் பைக்கை விட ரூ.2000 கூடுதலான விலையில் CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக் விலை ரூ.46,197 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)