சுஸூகி ஜிக்ஸர் SF-FI விற்பனைக்கு வந்தது

0

சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முழுதும் அலங்கரிக்கப்பட்ட சுஸூகி ஜிக்ஸர் SF பைக்கில் ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் ஆப்ஷனுடன் ₹.93,499 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ரியர் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் மோட்டோ ஜிபி எடிசனில் மட்டுமே கிடைக்கும்.

சமீபத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் பைக்குகளில் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தபட்ட ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் கொண்ட மாடல் தற்பொழுது சந்தைக்கு வந்துள்ளது.

Google News

படிங்க ; ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் SF ஸ்பெஷல் எடிசன்

 ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் மாடல் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துவதுடன் கூடுதலான எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் அமைந்துள்ள சுஸூகி ஜிக்ஸர் எஸ்எஃப் எஃப்ஐ மாடலின் பவர் 14.6 பிஹெச்பி வெளிப்படுத்தும் 154.9சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 14 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. சுஸூகி ஈகோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ள இரு பைக்குகளின் மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ வரை கிடைக்கும். ஜிக்ஸர் எஸ்எஃப் பைக்கில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரினை பெற்று விளங்குகின்றது. முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கிடைக்கின்றது.

சாதரன மாடலில் இருந்து வித்தியாசப்படும் வகையில் ஜிக்ஸர் SF-FI மாடலில் கிக் ஸ்டார்ட் இல்லை மற்றபடி எந்த வித்தியாசமும் இல்லை. முதற்கட்டமாக சென்னை , டெல்லி , மும்பை , கொல்கத்தா , பெங்களூரு , புனே அகமதாபாத் மற்றும் கொச்சி நகரங்களில் கிடைக்க உள்ளது.

கார்புரேட்டர் மாடலை விட ₹.4642 கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுஸூகி ஜிக்ஸர் SF-FI விலை ₹. 93,499 (எக்ஸ்ஷோரூம் டெல்லி).