2017 பஜாஜ் பிளாட்டினா கம்ஃபார்டெக் விற்பனைக்கு அறிமுகம்

ரூ.47,040 விலையில் 2017 பஜாஜ் பிளாட்டினா கம்ஃபார்டெக் பைக் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்கை பெற்ற முதல் 100-150cc பைக் பிரிவில் பெற்ற பிளாட்டினா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பஜாஜ் பிளாட்டினா

 

விற்பனையில் உள்ள பைக்குகளில் பெதுவாக ஆட்டோ ஹெட்லேம்ப் ஆன் எனப்படுக்கின்ற எந்த நேரமும் அணையாத முகப்பு விளக்கு பயன்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் முதன்முறையாக 100-150சிசி வரையிலான பிரிவில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்கை பெற்ற மாடலாக பிளாட்டினா கம்ஃபார்டெக் ஏஹெச்ஓ மாடலை விட சிறப்பான மைலேஜ் தரவல்லதாக உறுதிப்படுத்தியுள்ளது.

முதுகுவலியை குறைக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள கம்ஃபோர்டெக் நுட்பத்தில்  22 சதவீத கூடுதல் நீளம் கொண்ட பின்பக்க சஸ்பென்ஷன் ,  மற்றும் 28 சதவீத கூடுதல் நீளமான சஸ்பென்ஷன் தன்மையை வெளிப்படுத்தும் முன்புற சஸ்பென்ஷன் , 100சிசி பைக்குகளுடன் ஒப்பீடுகையில் 20 சதவீத கூடுதல் சொகுசு தன்மையை குண்டு குழியும் நிறைந்த சாலைகளிலும் வழங்கும் , ரப்பர் ஃபூட் பேட் , மேலும் புதிய இருக்கை அகலமாக சொகுசுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ 100சிசி பிரிவில் உள்ள பைக்குகளுடன் ஒப்பீட்டு தகவலை வெளியிட்டுள்ளது.

ஒரு லிட்டருக்கு 104 கிலோ மீட்டர் மைலேஜ் தரவல்ல 8.2 bhp குதிரை திறன் வெளிப்படுத்தும் 102சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் இழுவைதிறன் 8.6 Nm ஆகும். இதில் 4  வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2017 பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக் விலை ரூ.47,040 (தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம்)

Recommended For You