சுஸூகி ஜிக்ஸெர் SF ஏபிஎஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற சுஸூகி ஜிக்ஸெர் SF பைக்கில் கூடுதல் வசதிகள் மற்றும் நிறங்களுடன் ஏபிஎஸ் ஆப்ஷனலாக சேர்க்கப்பட்ட வேரியன்ட் விரைவில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது..

 

சுஸூகி ஜிக்ஸெர் SF ஏபிஎஸ்

150சிசி சந்தையில் மிகவும் பிரசத்தி பெற்று மாடலாக விளங்குகின்ற ஜிக்ஸெர் மற்றும் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடலில் ஏபிஎஸ் பிரேக் கூடுதலாக இணைக்கப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது.

டிசைன்

மிக நேர்த்தியாக ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாக வலம் வருகின்ற எஸ்எஃப் பைக்கில் வரவுள்ள ஏபிஎஸ் மாடலில் மூன்று விதமான வண்ணங்களை பெற்றதாக அமைந்திருக்கும் என தெரிய வந்துள்ளது.

புதிதான பாடி கிராபிக்ஸ் எஸ்பி என ஸ்டிக்கரிங் செய்யப்பட்ட லோகோ போன்றவற்றை கொண்டிருக்கும்.

எஞ்சின்

14.8 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ளதால் சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இஞ்ஜின் ஆற்றலை கடத்த 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

சிறப்புகள்

முன்பக்க மற்றும் பின்புறம் என இரண்டிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற்றதாக விளங்குகின்ற இந்த பைக்கில் முன்பக்கத்தில் ஒற்றை சேனல் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக இணைக்கப்பட்டிருக்கும். கார்புரேட்டர் மற்றும் எஃப்ஐ என இரண்டிலும் ஏபிஎஸ் பிரேக் கிடைக்க பெறலாம்.

ஜிக்ஸெர் எஸ்எஃப் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட மாடலின் முன்புறத்தில் 266 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 240 மிமீ டிஸ்க் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது, மற்றும் ட்ரம் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.

முன்பதிவு

தற்போது டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் டெலிவரி செய்யப்பட உள்ளது.

விலை

சாதாரன கார்புரேட்டர் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 95,499 மற்றும் எஃப்ஐ ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 99,312 ஆகிய விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Recommended For You