2018-ல் ஹஸ்க்வர்னா மோட்டார் சைக்கிள் களமிறங்குகிறது..!

உலகின் மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ஸ்வீடன் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ஹஸ்க்வர்னா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் மாடல்கள் அடுத்த வருடத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

ஹஸ்க்வர்னா மோட்டார் சைக்கிள்

பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனத்தின் 10 ஆண்டுகால கூட்டணியை கொண்டாடும் வகையில் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள விட்பிலின் 701, ஸ்வார்ட்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 போன்ற மாடல்கள் ஆஸ்திரியாவில் முநன்முறையாக உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.

அதனை தொடர்ந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில் பஜாஜ் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள ஸ்வார்ட்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 மாடல்களுக்கு சர்வதேச ஏற்றுமதி மையமாக இந்திய திகழும் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம்-பஜாஜ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் டியூக் 125, டியூக் 200, டியூக் 390 மாடல்களும் ஆர்சி 125, ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 போன்ற மாடல்களை பஜாஜ் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்து சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன.

இந்த வருடத்தின் இறுதிக்குள் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வார்னா மாடல்கள் உற்பத்தி சக்கன் ஆலையில் ஒரு லட்சத்தை எட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டுகின்ற நிலை 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள பஜாஜ், கேடிஎம் பைக்கிற்கு இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற சந்தைகளில் கிடைத்த ஆதரவினை போல ஹஸ்க்வர்னா மாடல்களும் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொடக்கநிலை ஹஸ்க்வார்னா ஸ்வார்ட்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 போன்ற மாடல்கள் மட்டுமே முதற்கட்டமாக இந்திய சந்தையில் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது.

Recommended For You