கேடிஎம் நிறுவனத்தின் தலைமையில் செயல்படும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதனை தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றது. குறிப்பாக முதலில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எனவும், பிறகு நவம்பரில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் இனி அடுத்த ஆண்டு வெளியிடுவதாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2020 முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான விதிகள் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக பிஎஸ்4 என்ஜினை கொண்ட ஹஸ்குவர்னா மாடல்களை வெளியிட பஜாஜ் தயாராக இல்லை என தெரிய வந்துள்ளது. குறிப்பாக டோமினார் 400, பல்சர் மற்றும் கேடிஎம் உட்பட அனைத்து ஹஸ்க்வர்னா மாடல்களும் அடுத்த ஆண்டு தொடக்க மாதங்களில் பிஎஸ்6 நடைமுறைக்கு மாற்றப்பட உள்ளது. இந்நிலையில் சக்கன் ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட உள்ள ஹஸ்க்வர்னா மாடல்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும், இந்திய சந்தையில் பிஎஸ்6 என்ஜின் பெற்ற ஹஸ்குவர்னா பைக்குகள் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குநர் மணி கன்ட்ரோல் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில், பஜாஜ் இந்தியாவில் ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலன் 401 மற்றும் விட்பிலென் 401 என இரு மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது. சக்கன் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள இரண்டு பைக்குகளும் கேடிஎம் 390 டியூக்கிலிருந்து எஞ்சின், கியர்பாக்ஸ் மற்றும் அடிச்சட்டத்தை பெற்று மாறுபட்ட பவர் மற்றும் ஸ்டைலிங் அம்ங்களை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
மேலும் வாசிங்க – பிஎஸ்6 என்றால் என்ன ? அதன் சிறப்புகள்
நன்றி – moneycontrol