2018 பஜாஜ் பல்சர் 150 பைக் விலை விபரம் வெளியானது

17 ஆண்டுகாலாமாக இந்திய சந்தையில் இளைஞர்களின் இதயதுடிப்பை எகிறவைக்கும் பல்சர் வரிசை மாடலின் முதல் பல்சர் 150 பைக் மாடலின் மேம்படுத்தப்பட்ட 2018 பஜாஜ் பல்சர் 150 பைக் விலை ரூ.78,234 என இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது.

2018 பஜாஜ் பல்சர் 150 பைக் படங்கள்

Spy Image Source: iamabikerdotcom

அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய பல்சர் 150 பைக்கில் பாரத் ஸ்டேஜ் 4 தர மாசு விதிகளுக்கு உட்பட 13.8 hp பவர் மற்றும் 13.4 Nm டார்க்கினை வழங்கவல்ல 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

பல்வேறு குறிப்பிடதக்க புதிய வசதிகளை பல்சர் 150 பைக் பெற்றிருந்தாலும் தோற்ற அமைப்பில் புதிய கிராபிக்ஸை பெற்று ஒற்றை இருக்கை அமைப்பிற்கு மாற்றாக இரு பிரிவை பெற்ற ஸ்பிளிட் இருக்கை மற்றும் புதிய கிராப் ரெயில் பெற்றிருப்பதுடன், கூடுதலாக பின்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பல்சர் 150 பைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்கினை பெற்று சைலன்சரில் புதிய கிரில் அமைப்பினை பெற்று புதிய ஃபூட் பெக் மற்றும் பிரேக் அசெம்பிளி அமைப்பினை பெற்றதாக வந்துள்ளது.

17 அங்குல அலாய் வீலை கருப்பு நிறத்தில் பெற்றுள்ள புதிய பல்சர் 150 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படவில்லை என்பதனால், ஏப்ரல் 1, 2018 க்கு முன்பாக சந்தையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  வருகின்ற ஏப்ரல் 1, 2018 முதல் 125சிசி க்கு கூடுதலான பைக்குகளில் கட்டயாயமாக ஏபிஎஸ் பிரேக்கினை பெற்றிருப்பது அவசியமாகின்றது.

இது முந்தைய மாடலை விட ரூ. 2500 வரை அதிகரிக்கப்பட்டு புதிய பல்சர் 150 பைக் விலை ரூ.78,234 (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) ஆக அமைந்திருக்கலாம்.