2018 ஹோண்டா ஆக்டிவா 125 விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் நவீனத்துவமான வசதிகளாக எல்இடி ஹெட்லைட் உட்பட இரு புதிய நிறங்களை பெற்ற 2018 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் ரூ. 62,037 எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.2000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இரண்டு மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட நிறங்களாக மேட் க்ரஸ்ட் மெட்டாலிக் மற்றும் மேட் செலினி சில்வர் என இரு நிறங்களை பெற்றிருப்பதுடன், எல்இடி ஹெட்லைட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பெற்று சர்வீஸ் இன்டிகேட்டர், இக்கோ மோட் உள்ளிட்ட அம்சங்களுடன், நடுத்தர மற்றும் டாப் வேரியன்டில் கிரே நிற அலாய் வீல் மற்றும் புகைப்போக்கியில் க்ரோம் கவர் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய 125 ஆக்டிவா ஸ்கூட்டரில் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் மற்றும் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு இடம்பெற்று நடுத்தர மற்றும் பேஸ் வேரியன்டில் டிரம் பிரேக்கினை பெற்று டாப் வேரியன்டில் மட்டும் டிஸ்க் பிரேக் உடன் சிபிஎஸ் எனப்படும் காம்பி பிரேக் அமைப்பினை கொண்டதாக கிடைக்கின்றது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா 5ஜி அம்சங்களில் பெரும்பாலானவை பெற்ற ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 8.5 ஹெச்பி ஆற்றல் மற்றும் 10.54 என்எம் டார்க் வழங்கும் 124.9 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

2018 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விலை பட்டியல்

ACTIVA 125 DRUM ரூ.62037

ACTIVA 125 DRUM ALLOY ரூ..63973

ACTIVA 125 DISC ரூ.66422

(எக்ஸ்-ஷோரூம் சென்னை)

Recommended For You