ரூ.18.50 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ S 1000 RR சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது

bmw s 1000rr

இந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம், 2019 பிஎம்டபிள்யூ S 1000 RR சூப்பர் பைக் மாடலை ரூபாய் 18.50 லட்சம் முதல் அதிகபட்சமாக டாப் மாடல் ரூபாய் 22.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் பைக்கில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த 999சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக  207hp பவரை வெளிப்படுத்துகின்றது.

பிஎம்டபிள்யூ S 1000 RR

மூன்று விதமான வேரியண்டுகளில் வெளிவந்துள்ள பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் மாடலில் புதிதாக மேம்படுத்தப்பட்ட நான்கு சிலிண்டர் இன்லைன் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 207 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 113 என்எம் டார்க் வழங்குகின்றது. முந்தைய 2018 மாடலை விட 8 ஹெச்பி வரை பவர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தரமான வேகத்தில் சிறப்பான முறையில் டார்க் வழங்குகின்ற இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள ஷிஃப்ட்கேம் டெக்னாலாஜி வழங்கப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

197 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் ஏபிஎஸ் உடன் கூடிய டைனமிக் டிராக்‌ஷன் கன்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஸ்டாண்டர்டு மாடலில் இடம்பெற்றுள்ள ரெயின், ரோடு, டைனமிக் மற்றும் ரேஸ் மோடுகள் உள்ளன. ஸ்போர்ட் மற்றும் எம் பேக் மாடலில் ரேஸ் ப்ரோ 1, ரேஸ் ப்ரோ 2, ரேஸ் ப்ரோ 3 போன்ற மோடுகள் உள்ளன.

BMW S 1000 RR Standard          –  ரூ. 18,50,000

BMW S 1000 RR Pro                   –  ரூ. 20,95,000

BMW S 1000 RR Pro M Sport     –  ரூ. 22,95,000

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

BMW S1000RR