பிஎம்டபிள்யூ மோட்டார்டு இரு சக்கர வாகன பிரிவு நிறுவனத்தின் புதிய டீலரை சென்னை அன்னா சாலையில் குன் மோட்டார்டு நிறுவனம் நேற்று திறந்துள்ளது.
பி.எம்.டபிள்யூ மோட்டார்டு
பிரசத்தி பெற்ற சூப்பர் பைக் தயாரிப்பாளராக விளங்கும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம் இந்தியாவில் தனது டீலர்கள் நெட்வொர்க்கை நாடு முழுவதும் விரிவுப்படுத்தும் வகையிலான நடவடிக்கையை மேற்கொன்டு வருகின்றது.
தற்போது இந்நிறுவனத்தின் டீலர்கள் சென்னை உட்பட அகமதாபாத், பெங்களூரு, மும்பை, புனே, மற்றும் டெல்லி போன்ற முன்னணி நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குன் மோட்டார்டு சார்பில் திறக்கப்பட்டுள்ள ஷோரூமில் பிஎம்டபிள்யூ S 1000 RR, பிஎம்டபிள்யூ R 1200 RS, பிஎம்டபிள்யூ R 1200 RT, பிஎம்டபிள்யூ K 1600 GTL, பிஎம்டபிள்யூ R 1200 R, பிஎம்டபிள்யூ S 1000 R, பிஎம்டபிள்யூ R NineT, பிஎம்டபிள்யூ R NineT ஸ்க்ராம்பளர், பிஎம்டபிள்யூ R 1200 G S அட்வென்ச்சர், பிஎம்டபிள்யூ R 1200 GS மற்றும் பிஎம்டபிள்யூ S 1000 XR போன்ற மாடல்கள் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த ஷோரூமில் சர்வதேச தரத்திலான விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் மற்றும் நிதி சார்ந்த சேவைகளை வழங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎம்டபிள்யூ தயாரித்துள்ள பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ சென்னை முகவரி : 377, Anna Salai, Subbarayan Nagar, Teynampet, Chennai-600018