இந்தியாவில் 2019 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் விற்பனைக்கு அறிமுகம்

0

Honda Africa Twin

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்ட 2019 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் பைக்கின் விலையை ரூ.13.50 லட்சம் என விற்பனைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  விற்பனையில் உள்ள மாடலில் உள்ள பெரும்பாலான வசதிகளை பெற்றதாக புதிய அப்பிரிக்கா ட்வீன் விளங்குகின்றது.

Google News

புதிதாக நீல நிறம் இணைக்கப்பட்டு, கோல்டு அசென்ட்ஸ், சரிவான பாதையை உணர்ந்து செயல்படும் வசதி (Incline Detection technology) மற்றும் ஸ்போக்குடு வீல் கொண்டு மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

2019 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் சிறப்புகள்

89hp பவர் மற்றும் 93.1Nm இழுவைத் திறனை வழங்கும் திரவத்தால் குளிர்விக்கும் வகையிலான பேரலல் ட்வீன் 998 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 6 வேக டிசிடி ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பரிக்கா ட்வீன் மாடலில் சுவிட்டசபிள் ஏபிஎஸ் பிரேக், ரைட் பை வயர், 7 விதமான அமைப்பினை பெற்ற Honda Selectable Torque Control , அர்பன், டூர் மற்றும் கிராவல் மூன்று விதமான ரைடிங் மோடினை பெற்று விளங்குகின்ற இந்த மாடலில் அர்பன் மோட் என்பது நகர்புற பயன்பாட்டிற்கும், டூர் என்பது நீண்ட நெடுஞ்சாலை பயணத்துக்கும், கிராவல் மோட் என்பது ஆஃப் ரோடு சார்ந்த பயணங்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது.

இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள எல்சிடி இண்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ரைட் மோடு தேர்வு, ஸ்பீடோமீட்டர், டீரீப்மீட்டர், எரிபொருள் அளவு, டாக்கோமீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

இந்தியாவில் முதற்கட்டமாக 50 பைக்குகள் மட்டும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் 22 பிரத்தியேக விங் டீலர்கள் மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை (சூர்யபாலா ஹோண்டா) மற்றும் சென்னை (எஸ்விஎம் ஹோண்டா) டீலர்களிடம் விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும் படிங்க – > ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் சோதனை ஓட்டம்