ரூ.1 லட்சம் விலையில் 2019 சுஸுகி ஜிக்ஸர் பைக் விற்பனைக்கு வந்தது

0

2019 Suzuki Gixxer

இளைய தலைமுறையினரின் விருப்பமான 2019 சுஸுகி ஜிக்ஸர் 155 பைக் மாடல் ரூபாய் 1,00,852 விலையில் (எக்ஸ்-ஷோரூம் சென்னை) விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட ரூ.12,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Google News

ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸை வழங்குகின்ற மிகவும் ஸ்டைலிஷான ஜிக்ஸர் பைக் மாடல் 150 முதல் 180சிசி வரையிலான சந்தையில் உள்ள பைக்குகள் உட்பட சில 200சிசி பைக்குகளுக்கும் மிகுந்த சவாலினை ஏற்படுத்துகின்றது.

இந்த பைக்கின் என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. 14.1 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் FI பெற்று சிறப்பான மைலேஜ் தரவல்லதாக விளங்கின்றது.. இதன் டார்க் 14.02 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கின்றது.

155சிசி கொண்ட இந்த என்ஜினில் எஃப்ஐ ஆப்ஷன் வழங்கப்பட்டிருப்பதனால் இப்போது 6 சென்சார்கள் உள்ளன. அவை ஆக்ஸிஜன் சென்சார், இன்டேக் ஏர் பிரஷர் சென்சார், இன்டேக் ஏர் வெப்பநிலை சென்சார், திரோட்டில் பொசிஷன் சென்சார், என்ஜின் வெப்பநிலை சென்சார், கிரான்ஸ்காஃப்ட் சென்சார் போன்ற 6 சென்சார்களும் இணைந்து சிறப்பான முறையில் இந்த பைக்கினை நிகழ்நேரத்தில் தேவைப்படும் எரிபொருள்-காற்று கலவையின் விகிதத்தை ECM வாயிலாக தீர்மானிக்க உதவுகிறது.

மேலும் சுசுகி ஜிக்ஸ்ர் 155 பைக்கில் புதிய எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ஒரு புதிய எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெறுகிறது. எல்இடி டெயில்லைட், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், இரட்டை புகைப்போக்கி கொண்ட எக்ஸ்ஹாஸ்ட், ஸ்டைலிஷான டேங்க் டிசைன் மற்றும் ஸ்பிளிட் இருக்கைகளை பெற்றுள்ளது.

முந்தைய மாடலை விட கூடுதலாக 4 கிலோ வரை எடை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கில் 5 மிமீ வரை இருக்கை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றபடி பெரும்பாலான வசதிகள் முந்தைய மாடலில் இருந்து பெற்றுள்ளது. முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது.

முந்தைய மாடலை விட விலை உயர்த்தப்பட்டிருந்தாலும் பல்வேறு வசதிகளை பெற்றுள்ள இந்த பைக்கின் ஆன்-ரோடு சென்னை விலை ரூ.1.25 லட்சமாக இருக்கும். தமிழகத்தில் 2019 சுசுகி ஜிக்ஸர் 155 பைக் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,00,852 ஆகும். ஜிக்ஸர் பைக்கில் கருப்பு, சில்வர் மற்றும் நீலம் என மூன்று நிறங்களை பெற்றுள்ளது. முன்பாக இந்நிறுவனம், வெளியிட்டுள்ள ஜிக்ஸர் எஸ்எஃப் 155 மற்றும் ஜிக்ஸ்ர் எஸ்எஃப் 250 மாடல்கள் அமோக வரவேற்பினை பெற்றுள்ளன.