2022 ஏப்ரிலியா SR 125 & SR 160 விற்பனைக்கு வெளியானது

0

aprilia sr 160 and sr 125 facelift launched

இந்திய சந்தையில் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற ஏப்ரிலியா SR 125 மற்றும் SR 160 என இரு ஸ்கூட்டர் மாடல்களை முறையே ரூ.1.08 லட்சம் மற்றும் ரூ.1.17 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரிலியா ரேசிங் ஸ்டைல் பைக்குகளின் தோற்ற உந்துதலை பெற்றதாக அமைந்துள்ள எஸ்ஆர் 125 மற்றும் எஸ்ஆர் 160 மாடலில் V-வடிவ எல்இடி ஹெட்லைட், எல்இடி பெசிஷன் லைட்ஸ், எல்இடி டெயில் லைட், ஸ்பிளிட் இருக்கைகள் உட்பட அப்ரான் என தோற்ற அமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்களை பெற்று இளைய தலைமுறையினரை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.

மேக்ஸி ஸ்டைல் SXR 160 ஸ்கூட்டரில் உள்ள 5.7 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று ட்ரீப்மீட்டர், ஸ்பீடோமீட்டர், எரிபொருள் அளவை அறிந்து கொள்ளும் வசதி ஆகியவற்றுடன் டேக்கோமீட்டரும் இணைந்துள்ளது.

இரு ஸ்கூட்டர்களும் 14 இன்ச் அலாய் வீல் பெற்று ஸ்கூட்டர்களிலும் 6-லிட்டர் எரிபொருள் டேங்க், 169 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ், 11 லிட்டர் இருக்கைக்கு அடியிலான இடவசதி மற்றும் USB போர்ட் ஆகியவை உள்ளன. எஸ்ஆர் 160 ஏபிஎஸ் சிஸ்டமும், எஸ்ஆர் 125 சிபிஎஸ் உடன் வந்துள்ளது.

ஏப்ரிலியா SR 160 மாடலில் 7600 RPM-ல் 10.9 BHP மற்றும் 6000 RPM-ல் 11.6 Nm டார்க் வழங்கும் 160cc, 3 வால்வு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஏப்ரிலியா SR 125 ஸ்கூட்டரில் 9.8 BHP மற்றும் 9.7 Nm டார்க் வெளிப்படுத்தும் 125cc என்ஜின் இடம்பெற்றுள்ளது.

2022 Aprilia SR ரேஞ்சு விலை பட்டியல்

Model Price
2022 Aprilia SR 125 Rs. 1,07,595/-
2022 Aprilia SR 160 Rs. 1,17,491/-