ஆட்டோ எக்ஸ்போ 2020: மேக்ஸி ஸ்டைல் ஏப்ரிலியா SXR 125, SXR 160 ஸ்கூட்டர்கள் அறிமுகம்

0

aprilia sxr 160

பியாஜியோ குழுமத்தின் ஏப்ரிலியா நிறுவனம், இந்தியாவில் பிரீமியம் ரக மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டர் SXR 125 மற்றும் SXR 160 என இரு ஸ்கூட்டர்களை செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வெளியிடுவதனை முன்னிட்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு கொண்டு வந்துள்ளது.

Google News

ஏப்ரிலியா நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டு மாடல்களும் மிக நேர்த்தியான மேக்ஸி ஸ்டைலை பெற்று இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலுக்கு போட்டியாக அமைய உள்ளது. பர்க்மேன் 125 சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.

125 சிசி என்ஜினை பெற உள்ள எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் 160 சிசி என்ஜினை பெற உள்ள எஸ்எக்ஸ்ஆர் 160 என இரு மாடல்களும் ஸ்டைலிங் அம்சங்களை ஒரே மாதிரியாக பகிர்ந்து கொள்ள உள்ளன. குறிப்பாக முழு எல்இடி விளக்குகள், உயர்த்தப்பட்ட கைப்பிடி, யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட், முழு டிஜிட்டல் கிளஸ்ட்டர் கன்சோல், டிஸ்க் பிரேக் உடன் ஏபிஎஸ், 5 ஸ்போக்குகளை பெற்ற 12 அங்குல அலாய் வீல் பெற்றிருக்கம். சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய ஆறு விதமான நிறங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 என இரு மாடல்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் மாதம் துவங்குவதுடன் விற்பனைக்கு செப்டம்பரில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.