மேக்ஸி ஸ்டைல் SXR 160 மாடலை தொடர்ந்து ஏப்ரிலியா நிறுவனம் SXR 125 ஸ்கூட்டரை விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையில் முன்பதிவை துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோற்ற அமைப்பில் தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற பிரீமியம் SXR 160 மாடலின் அடிப்படையிலான அம்சங்களை கொண்டிருக்கின்ற எஸ்எக்ஸ்ஆர் 125 மாடலில் எஸ்ஆர் 125 மற்றும் ஸ்டராம் 125 ஸ்கூட்டரில் உள்ள 3 வால்வுகளை பெற்ற 125சிசி இன்ஜின் அதிகபட்சமாக 9.4 bhp பவரை 7250 rpm-லும், 9.9 Nm டார்க் 6250 rpm-ல் வழங்குகின்றது. இதில் சிவிடி ஆட்டோ டிரான்ஸ்மிஷன் பெற்றுள்ளது.
குறிப்பாக எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரில் முழு எல்இடி விளக்குகள், உயர்த்தப்பட்ட கைப்பிடி, யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட், முழு டிஜிட்டல் கிளஸ்ட்டர் கன்சோல், டிஸ்க் பிரேக் உடன் ஏபிஎஸ், 5 ஸ்போக்குகளை பெற்ற 12 அங்குல அலாய் வீல் பெற்றிருக்கம். சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய ஆறு விதமான நிறங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.
ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு விரைவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.