பஜாஜ் ஆட்டோ பைக்குகளுக்கு 5 வருட வாரண்டி , சிறப்பு சலுகைகள் விபரம்

0

இந்தியாவின் மிகப்பெரிய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் , தனது குறிப்பிட்ட சில பைக்குகளுக்கு ஹாட் ரிக் ஆஃபர் என்ற பெயரில் 5 வருடம் வாரண்டி மற்றும் ஒரு வருட இலவச வாகன காப்பீடு ஆகியவற்றுடன் இரண்டு வருட இலவச சர்வீஸ் வழங்குவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மழைக்காலத்தை முன்னிட்டு பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள சிறப்பு சலுகையை ஹாட் ரிக் ஆஃபர் எனும் பெயரில் அனைத்து மாடல்களுக்கும் 5 வருட வாரண்டி, இலவச சர்வீஸ் இரண்டு வருடங்களுக்கு மற்றும் குற்றிப்பட்ட சில மாடல்களுக்கு (பல்ஸர் 150, பல்ஸர் 160, பஜாஜ் V, பிளாட்டினா) ஒரு வருட இலவச வாகன காப்பீடு வழங்கப்படுகின்றது.

Google News

பொதுவாக அனைத்து மாடல்களுக்கும் 5 வருட வாரண்டி வழங்கப்படுகின்றது. இந்த வாரண்டியுடன் கூடுதலாக இரண்டு வருட இலவச சர்வீஸ் என பல்வேறு சலுகைகளை விற்பனை அதிகரிக்கும் நோக்கில் இந்நிறுவனம் செயற்படுத்தியுள்ளது.

இந்த சிறப்பு சலுகை ஜூலை 1 – ஜூலை 21, 2018 வரை பஜாஜ் பைக்குகள் வாங்கும் வாடிகையாளர்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.