குறைந்த விலை பஜாஜ் பிளாட்டினா 100 ES விற்பனைக்கு வெளியானது

0

2021 Bajaj Platina 100 ES

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் குறைவான விலையில் கிடைக்கின்ற பஜாஜின் பிளாட்டினா 100 ES மாடல் விலை ரூ.53,920 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Google News

பிளாட்டினா 100 பைக்கின் தோற்ற அமைப்பில் முகப்பு எல்இடி டி.ஆர்.எல் மற்றும் விண்ட்ஸ்கீரின் சிறிய அளவில் மாற்றங்களை பெற்று புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ், உடன் கைகளுக்கு பாதுகாப்பான ஹேண்ட் கார்ட்ஸ், அகலமான ரப்பர் ஃபூட் பேட், புதிய வடிவத்திலான இன்டிகேட்டர், மிரர் உட்பட சொகுசான இருக்கை, மிக சிறப்பான சஸ்பென்ஷனை வழங்கும் வாயு நிரப்பட்ட நைட்ராக்ஸ்  ஸ்பிரிங் ஆன் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

102 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டு 7500 ஆர்பிஎம்-மில் 7.9 ஹெச்பி பவரும், 5500 ஆர்பிஎம்-மில் 8.3 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் அல்லது முன்புறத்தில் டிரம் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது.

பஜாஜ் பிளாட்டினா 100 ES பைக்கின் விலை ரூ.60,122 முதல் துவங்குகின்றது.

2021 Bajaj Platina 100 ES side