Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா ஷைன் 100 Vs போட்டியாளர்கள் ஒப்பீடு – சிறந்த பைக் எது ?

by automobiletamilan
March 16, 2023
in பைக் செய்திகள்

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கிற்கு போட்டியாக வந்துள்ள ஹோண்டா ஷைன் 100 மாடலின் விலை மற்றும் வசதிகளுடன் ஒப்பீடு செய்து அனைத்து முக்கிய விபரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம். இதுதவிர, ஹீரோ HF 100, HF டீலக்ஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

100-சிசி இரு சக்கர வாகனப் பிரிவில் ஹீரோ ஸ்பிளெண்டர், ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 ஆகிய மாடல்கள் பல காலமாக உள்ளன. முதன்முறையாக 100சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹோண்டா தனது முதல் மாடலை வெளியிட்டுள்ளது.

Honda Shine 100 Vs Rivals

நாட்டின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 100சிசி சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை கொண்டிருக்கும் நிலையில் இதற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஷைன் 100 மாடலில் புதிய 99.7 சிசி PGM-Fi ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7.5 bhp பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்று சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய போட்டியாளரான ஹீரோ HF 100 நாட்டின் விலை குறைந்த இரு சக்கர வாகனமாக உள்ளது. இந்த மாடலின் விலை தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் ரூ. 54,768 ஆக உள்ளது. குறிப்பாக இந்த மாடல் கிக் ஸ்டார்டர் மட்டுமே பெற்றதாக அமைந்துள்ளது.

பொதுவாக ஹீரோ நிறுவன ஸ்ப்ளெண்டர் பிளஸ், எச்எஃப் 100 மற்றும் எச்எஃப் டீலக்ஸ் என மூன்று மாடல்களில் மிகவும் நம்பகமான 97.2 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்த மிக முக்கிய போட்டியாளரான பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 100 சிசி ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக பவர்  7.9 bhp at 7,500 rpm மற்றும் 8.34 Nm at 5,500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

SpecsHonda Shine 100Hero Splendor +Hero HF Deluxe/HF100Bajaj Platina
என்ஜின்99.7cc97.2cc 97.2cc 102cc
அதிகபட்ச பவர்7.5 bhp7.91 bhp at 8,000 rpm7.91 bhp at 8,000 rpm7.9 bhp at 8,000 rpm
அதிகபட்ச டார்க்8.05 Nm8.05 Nm at 6000 rpm8.05 Nm at 6000 rpm8.34 Nm at 5500 rpm
கியர்பாக்ஸ்4 ஸ்பீடு4 ஸ்பீடு4 ஸ்பீடு4 ஸ்பீடு
விலை₹ 64,900₹ 72,226 – ₹ 74,326₹ 60,088 – ₹ 67,938₹ 67,814
Honda Shine 100 Vs Hero Splendor+ Vs Hero HF 100 Vs Hero HF deluxe Vs Bajaj Platina
Shine 100Splendor+HF DeluxePlatina 100
வீல்பேஸ்1245mm1236mm1235mm1255mm
இருக்கை உயரம்786mm785mm805mm807mm
கிரவுண்ட்
கிளியரண்ஸ்
168mm165mm165mm200mm
எரிபொருள் டேங்க்9 litres9.8 litres9.6 litres11 litres
Kerb weight99kg112kg110kg (Kick) 112kg (Self)117kg
சஸ்பென்ஷன் (F/R)Telescopic fork/ Twin shocksTelescopic fork/ Twin shocksTelescopic fork/ Twin shocksTelescopic fork/ Twin shocks
பிரேக் (F/R)Drum/ Drum130mm Drum/ 130mm Drum130mm Drum/ 130mm Drum130mm Drum/ 110mm Drum
டயர் (F/R)2.75-17/ 3.00-1780/100-18/ 80/100-182.75-18/ 2.75-182.75-17/ 3.00-17
  1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் அல்லது ஷைன் 100 வாங்கலாமா ?

    ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கிற்கு போட்டியாக அமைந்துள்ள ஹோண்டா ஷைன் 100 பைக்கில் குறைந்த விலையில் வந்தாலும் தொடர்ந்து ஸ்ப்ளெண்டர் பிளஸ் பல்வேறு வசதிகளுடன் நம்பகமான பைக் மாடலாக உள்ளது.

  2. ஹோண்டா ஷைன் 100 மைலேஜ் எவ்வளவு ?

    ஹோண்டா ஷைன் 100 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 70 Kmpl தரக்கூடும்

  3. ஹோண்டா ஷைன் 100 ஆன்-ரோடு ரேட் ?

    புதிய ஹோண்டா ஷைன் 100 பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 79,545 (தமிழ்நாடு, சென்னை)

Tags: Bajaj Platina 100Hero HF 100Hero HF DeluxeHero SplendorHonda Shine 100
Previous Post

2023 பஜாஜ் பல்சர் NS160 பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Next Post

2023 பஜாஜ் பல்சர் NS200 பைக் சிறப்புகள்

Next Post
2023 பஜாஜ் பல்சர் NS200 பைக் சிறப்புகள்

2023 பஜாஜ் பல்சர் NS200 பைக் சிறப்புகள்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version