விரைவில், பஜாஜ் பல்சர் 125 பைக் அறிமுகமாகிறது

0

pulsar 125

முன்பாக பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு கிடைத்து வரும் நிலையில் ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற பல்சர் 125 பைக் மாடலானது டீலர்களை வந்தடைந்துள்ளதால் விரைவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

Google News

புதிய 125 சிசி பல்சரில் வரவிருக்கும் பாரத் ஸ்டேஜ் 4 மாசு உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 124.45 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் 8,500 ஆர்பிஎம்மில் 11.8 பிஹெச்பி  6,000 ஆர்பிஎம்மில் மற்றும் 11.5 என்எம் டார்க்கை வழங்குகின்றது. இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் வரக்கூடும்.

பிரேக்கிங் சார்ந்த அம்சத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் சிபிஎஸ் பிரேக் உடன் வந்துள்ளது.. பல்ஸர் 150 ட்வின் டிஸ்க் பிரேக் பைக்கில் உள்ளதை போன்ற ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற பல்சர் 125 ஒரு புதிய ஹெட்லைட் கவுல் பேனலை கொண்டிருப்பதுடன் புதிய பாடி கிராபிக்ஸ், ஸ்பிளிட் இருக்கை மற்றும் கிராப் ரெயில் வழங்கப்பட்டிருக்கின்றது. பல்சர் 125 நியான் மாடலில் சிங்கிள் சீட் பெற்றதாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

டிஜிட்டல் அனலாக் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டருடன் கூடியதாக வந்துள்ள இந்த பைக்கில் மிக நீளமான இருக்கை கொண்டதாக வந்துள்ளது. பஜாஜ் பல்சர் 125 பைக்கின் விலை ரூபாய் 64,000 (டிரம் பிரேக்) மற்றும் டிஸ்க் பிரேக் பெற்ற பல்சர் 125 ரூபாய் 66,618 (டிஸ்க் பிரேக்) (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆகும்.

பஜாஜ் பல்சர் 125 நியான்

புதிதாக வரவுள்ள ஸ்பீளிட் சிட், டேங்க் எக்ஸ்டென்ஷன் போன்றவை பெற்ற மாடல் அதிகபட்சமாக ரூ. 3,500 வரை விலை உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, ரூ.70,000 விலையில் பல்ஸர் 125 டாப் வேரியண்ட் கிடைக்க தொடங்கலாம்.

image source – jet wheels/youtube