ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் பஜாஜ் பல்சர் NS 160 அறிமுகம்

0
பஜாஜ் பல்சர் என்எஸ்160
 

பல்சர் என்எஸ்200 பைக்கின் அடிப்படையில் வெளியான பஜாஜ் பல்சர் NS 160 பைக்கினில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் எனப்படுகின்ற பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு இணைக்கப்பட்டு ரூ. 92,595 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பைக்கிற்கு சவாலாக 200சிசி பெற்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர், டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V, அப்பாச்சி RTR 160, ஹோண்டா சிபி ஹார்னெட் மற்றும் சுசூகி கிக்ஸ்ர் பைக்குகள் விளங்குகின்றது.

Google News

பஜாஜ் பல்சர் NS 160 ஏபிஎஸ்

160.3cc, 4-வால்வுகளை பெற்ற சிங்கிள் சிலிண்டர் என்ஜினுடன் 15.5 hp குதிரைத்திறன் மற்றும் 14.6Nm முறுக்கு விசை வெளிபடுத்தும். இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் , பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்றுள்ள இந்த மாடலின் முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டிருக்கின்றது.

முந்தைய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அல்லாத மாடலை விட ரூ.  6656 வரை விலை உயர்த்தி, தற்போது பஜாஜ் பல்சர் NS 160 பைக் விலை ரூபாய் 92,595 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏபிஎஸ் பொருத்தபட்ட பல்சர் 180F மாடலை வெளியிட்டிருந்தது.