ரூ.81,466 க்கு பஜாஜ் பல்சர் NS160 பைக் விற்பனைக்கு வந்தது..!

0

பஜாஜ் ஆட்டோவின் புதிய பஜாஜ் பல்சர் 160 பைக் ரூ. 81,466 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 15.5 hp பவரை வெளிப்பட்டுத்தும் 160சிசி எஞ்சினை பஜாஜ் பல்சர் NS160 பைக் பெற்றுள்ளது.

பஜாஜ் பல்சர் NS160 பைக்

இந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பஜாஜ் பல்சர் NS160 மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில் இந்த பைக்கில் 15.5 பிஎஸ் சக்தியை வெளிப்படுத்தி 14.6 என்எம் டார்கினை வெளிப்படுத்துகின்ற 160.3 சிசி ஆயில் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு ஆற்றலை எடுத்து செல்ல 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய பல்சர் 160 என்எஸ் மாடலில் முன்புற டயர்களுக்கு 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயர்களுக்கு 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது.

புதிய பல்சர் என்எஸ் 160 பைக் மாடல் மிகவும் சவாலான 150சிசி முதல் 160சிசி வரையிலான பிரிவில் உள்ள மாடல்களான  சுசுகி ஜிக்ஸெர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, ஹோண்டா சிபி ஹார்னெட் 160 மற்றும் யமஹா FZ-S போன்ற மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ளது.

அறிமுகத்தின் பொழுது பேசிய பஜாஜ் ஆட்டோ மோட்டார்சைக்கிள் பிரிவு தலைவர் எரிக் வாசு கூறுகையில் ஸ்போர்ட்டிவ் பைக் விற்பனை பிரிவில் 70 சதவிகித வாகனங்கள் 150-160சிசி வரையிலான பிரிவில் மட்டுமே விற்பனை ஆகின்ற நிலையில் இதே பிரிவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் 16 ஆண்டுகால ஸ்போர்ட்டிவ் பைக் பிராண்டான பல்சரில் அறிமுகம் செய்யப்படுவது மிகவும் வலுசேர்க்கும் என கூறியுள்ளார்.

சென்னையில் பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் விலை ரூ. 81,466  ஆகும்.

பல்சர் 160 பைக்கில் நீலம் , சிவப்பு மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும். அறிவிக்கப்பட்டுள்ள விலை விபரம் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி விலை ஆகும்.

பஜாஜ் பல்சர் வரிசையில் பல்சர் 135, பல்சர் 150,பல்சர் 180 ,பல்சர் 200, பல்சர் 220F மற்றும் பல்சர் ஆர்எஸ் 200 போன்றவற்றுடன் புதிய பல்சர் 160 பைக்கும் இணைந்துள்ளது.

Bajaj Pulsar NS 160 Image gallery