புதிய அம்சங்களுடன் வெளியான 2018 பஜாஜ் பல்சர் NS160

0

ரியர் டிஸ்க் பிரேக் உடன் உருவாக்கப்பட்டுள்ள பஜாஜ் பல்சர் NS160 மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் உள்ள டீலர்களிடம் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டிஸ்க் பிரேக் மட்டுமின்றி புதிய அலாய் வீல் டிசைனை உள்ளிட்ட வசதிகளும் இந்த மோட்டார் சைக்கிள்களில் இடம் பெற்றுள்ளது. புதிய மோட்டார் சைக்கிள் வகைகள் 82 ஆயிரத்து 630 ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை புனேவில்) விற்பனை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியர் டிரம் பிரேக் வெர்சனை ஒப்பிடும் போது ரியர் டிஸ்க் பிரேக்களுடன் இந்த பைக்கை வாங்கும் போது 2,000 ரூபாய் வரை அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த அப்டேட்கள் தவிர, மோட்டார் சைக்கிள் டிசைனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Google News

இந்த பிரீமியம் பயண மோட்டார் சைக்கிள், 160.3cc, 4-வால்வு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களுடன் 15.5PS மற்றும் 14.6Nm டார்க்யூவை வெளிபடுத்தும். இந்த இன்ஜின்கள் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் 142 கிலோ எடை கொண்டாதாக இருக்கும்.

NS160 மோட்டார் சைக்கிள்கள், NS200-ல் இருந்து பெறப்பட்டமோட்டார் சைக்கிள்கள் டபுள் கிர்டேல் பிரேம், முன்புறமாக டெலிஸ்கோபிக் போரக்ஸ் மற்றும் ரியர் பகுதியில் மோனோ சாக்ஸ் ஆகியவற்றுடன் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள ரியர் டிஸ்க்கள் தோராமையாக 230mm யூனிட் அளவு கொண்டதாக இருக்கும். BS-ஐ பல்சர் நிறுவனம் அறிமுகம் செய்ய இது சரியான வாய்ப்பாக இருந்தாலும், விலையை பொறுத்தவரை ஆலோசிக்கும் விஷயமாக இது இருந்து வருகிறது.

ஏற்கனவே, பஜாஜ் பல்சர் NS160 பிரபலமான மாடலாக இருந்து வரும் போது, இதில் சில பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பஜாஜ் பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V, ஹோண்டா சிபி ஹார்னெட் மற்றும் சுசூகி கிக்ஸ்சர் பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.