2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது

0

இத்தாலியை சேர்ந்த பிரீமியம் டூவிலர் தயாரிப்பாளரான பென்னேலி, வரும் அக்டோபர் மாதம் முதல் தங்கள் விற்பனையை இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த நிறுவனம் 135-200cc சிறியளவிலான பைக் தயாரிக்க முடிவு செய்ததுடன், வரும் 2019ம் ஆண்டில் இந்த பைக்குகளை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது

மஹாவீர் குருப் உடன் புதிய பார்ட்னராக இணைந்துள்ள இந்தியாவில் தனது விற்பனை பயணத்தை தொடங்கியுள்ள இந்த நிறுவனம், வரும் 2019ம் ஆண்டில் 300-600cc மோட்டர் சைக்கிள்-களை 12 வகையான மாடல்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Google News

இந்த நிறுவனம் கடந்த மே மாதம் பைக் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது. இந்நிலையில், இந்தியாவில் விற்பனையை துவக்க முடிவு செய்த நிறுவனம் தற்போது மஹாவீர் குருப் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்த குருப்- உடன் இணைந்து, ஹைத்ராபாத்தில் தங்கள் தொழிற்சாலையை உருவாக்கி, வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளது.

இதுமட்டுமின்றி இரண்டு நிறுவனங்களும் இணைந்து, தெலுங்கானாவில் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை, தெலுங்கானா மாநில அரசுடன் செய்து கொண்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பென்னேலி நிறுவன உயர் அதிகாரி டேன்டே புஸ்டோஸ், இந்தியா மார்கெட்டில் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், நாங்கள் உடனடியாக முடிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டோம். இதை தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் முதல் பென்னேலி நிறுவனம் சார்பில் மூன்று புதிய 300cc மோட்டார் சைக்கிள்களை ஹைதராபாத் தொழிற்சாலையில் இருந்து வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 300-600cc மோட்டார் சைக்கிள்களில் 12 வகையான மாடல்களை விற்பனை கொண்டு வருவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும் ஆண்டுக்கு 3,000 யூனிட்களை விற்பனைசெய்வதுடன், மார்க்கெட் சேர் 25-30 சதவிகித்தில், 300-600cc பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள 18 டீலர்ஷிப்களை, 55-60ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.