பெனெல்லி trk 502,பெனெல்லி trk 502x,benelli trk 502,benelli trk 502x

பெனெல்லி இந்தியா நிறுவனம், புதிதாக பெனெல்லி TRK 502 மற்றும் பெனெல்லி TRK 502X என இரு நடுத்தர அட்வென்ச்சர் ரக மோட்டார் சைக்கிள் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. குறிப்பாக பெனெல்லி TRK 502X  முழுமையான ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்கும் வகையில் வந்துள்ளது.

இரு TRK 502 பைக் மாடல்களிலும், 499சிசி திறன் பெற்ற என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 47.5 hp பவர் மற்றும் 46 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பெனெல்லி trk 502,பெனெல்லி trk 502x,benelli trk 502,benelli trk 502x

பிரேக்கிங் தொடர்பான முறையில் டுயல் சேனல் ஏபிஎஸ் பெற்று முன்புறத்தில் இரட்டை 320 மிமீ டிஸ்க் மற்றும் 260 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாகவும், சஸ்பென்ஷன் பிரிவில் 50mm இன்வெர்டேட் ஃபோர்க்கு மற்றும் 135mm பயணிக்கின்ற மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது. மேலும் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக இரு பைக்குகளிலும் இடம்பெற்றுள்ள பொதுவான அம்சத்தை தொடர்ந்து 800 மிமீ இருக்கை உயரத்தை TRK 502 பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து 840 மிமீ இருக்கை உயரத்தை TRK 502X பெற்றுள்ளது.

இந்தியாவில் பெனெல்லி TRK 502 ரூ. 5 லட்சம் மற்றும் பெனெல்லி TRK 502X பைக் விலை ரூ. 5.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெனெல்லி trk 502,பெனெல்லி trk 502x,benelli trk 502,benelli trk 502x பெனெல்லி trk 502,பெனெல்லி trk 502x,benelli trk 502,benelli trk 502x