ரூ.2.50 லட்சம் விலை குறைந்த ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் & சாஃப்ட்டெயில் கிளாசிக்

0

Harley Davidson Heritage Softail Classicஇந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரின் ஃபேட் பாய் & சாஃப்ட்டெயில் கிளாசிக் என இரு பைக் மாடல்களின் விலை அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் & சாஃப்ட்டெயில் கிளாசிக்

இந்தியாவில் கையிருப்பில் உள்ள 2017 ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய் மற்றும் ஹார்லி-டேவிட்சன் சாஃப்ட்டெயில் கிளாசிக் ஆகிய பைக்குகள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள சலுகை 2017 மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாடல்களும் 1,690 cc ஏர்-கூல்டு வி-ட்வீன் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் ஃபேட்பாய் மாடல் அதிகபட்சமாக 124 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. மற்றொரு மாடலான  சாஃப்ட்டெயில் கிளாசிக் அதிகபட்சமாக 125 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இரண்டிலும் 5 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

ஃபேட்பாய் மாடல் ரூ. 17,01,000 விலையிலிருந்து தற்போது ரூ.2.02 லட்சம் வரை குறைக்கப்பட்டு ரூ. 14,99,990 விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது. ஷாஃப்ட்டெயில் கிளாசிக்  மாடல் ரூ. 18,50,000 விலையிலிருந்து தற்போது ரூ.2.51 லட்சம் வரை குறைக்கப்பட்டு ரூ.15,99,990 விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய் விலை – ரூ.14,99,990/-

ஹார்லி-டேவிட்சன் சாஃப்ட்டெயில் கிளாசிக் விலை ரூ.18,50,000/

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை)

Harley Davidson Fat Boy