இந்தியாவில் 2021 முதல் ஹார்லி-டேவிட்சன் பைக் விற்பனை துவங்குகின்றது

0

Harley Davidson Street 750

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விற்பனையை இந்தியாவில் ஜனவரி 2021 முதல் துவங்குவதுடன் விற்பனைக்கு பிந்தைய சேவை, உதிரிபாகங்கள் மற்றும் HOG என அனைத்தும் கிடைக்க துவங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹார்லி வெளியிட்டுள்ளது.

Google News

ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் இணைந்து இந்திய சந்தையில் பிரீமியம் ஹார்லி-டேவிட்சன் பைக்குகள், ஆக்செசரீஸ், சர்வீஸ் என அனைத்தையும் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. இது மட்டுமல்லாமல் பிரீமியம் பைக்குகளை ஹீரோ தயாரித்து ஹார்லி-டேவிட்சன் பெயரில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

தற்போதுள்ள உரிமையாளர்களுக்கு சிறப்பான சேவையை உறுதி செய்வதற்காக ஹீரோவுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாக ஆசியா மார்க்கெட்ஸ் & இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சஜீவ் ராஜசேகரன் தெரிவித்தார். ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள், உதிரிபாகங்கள், பொது விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகள், உத்தரவாதம் மற்றும் எச்.ஓ.ஜி. நடவடிக்கைகள் 2021 ஜனவரி முதல் துவங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய டீலர் நெட்வொர்க் 2020 டிசம்பர் 31 வரை செயல்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. 2021 ஜனவரி 1 முதல் புதுப்பிக்கப்பட்ட டீலர் நெட்வொர்க் மற்றும் சேவை மையங்கள் பற்றிய விவரங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.