32 நாட்களில் 14 லட்சம் டூ வீலர்ளை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

0

Hero Splendor Black and Accent Firefly Golden color

உலகின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் பண்டிகை காலத்தை முன்னிட்டு 14 லட்சம் வாகனங்களை கடந்த 32 நாட்களில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

நவராத்திரியின் முதல் நாள் துவங்கிய பண்டிகை காலம் தீபாவளியின் அடுத்த வளர்பிறை இரண்டாம் நாள் பாய் தூஜ் பண்டிகைக்கு இடையிலான 32 நாட்களில் இந்நிறுவனம் 14 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதாவது பண்டிகை கால விற்பனையில் முந்தைய 2019 ஆம் ஆண்டை விட 98% மற்றும் 2018 ஆண்டுடன் ஒப்பிடும்போது 103% வளர்ச்சி பெறுள்ளது.

குறிப்பாக இந்த காலகட்டத்தில் 100 சிசி ஸ்பிளெண்டர் ப்ளஸ், ஹெச்எஃப் டீலக்ஸ், 125 சிசி பிரிவில் உள்ள கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் பிரீமியம் மாடல்களான எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள் அமோக வரவேற்பினை பெற்றிருப்பதுடன், ஸ்கூட்டர் பிரிவில் டெஸ்ட்டினி, பிளெஷர் என இரு மாடல்களும் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பிறகு இரு சக்கர வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை மிக சிறப்பாக ஹீரோ மோட்டோகார்ப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

Web title : Hero MotoCorp Retails Over 14 Lakh Two-Wheeler During Festive Season