ஹீரோ எக்ஸ்ட்ரீம் NXT பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது

0

hero xtreme nxt teaserஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் NXT பைக் மாடல் ஜனவரி 30, 2018 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டீசர் வீடியோவில் ‘What’s NXT’ என்ற கோஷத்தினை வெளிப்படுத்துவதன் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் NXT

hero xtreme 200s auto expo 2016

Google News

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தபட்ட 200சிசி எஞ்சினை பெற்ற எக்ஸ்ட்ரீம் 200 எஸ் கான்செப்ட் மாடலை பின்னணியாக கொண்ட மாடலை எக்ஸ்ட்ரீம் NXT என்ற பெயரில் வெளியிட வாய்ப்புள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் நெக்ஸ்ட் பைக்கில் 18.6 PS ஆற்றலை 8500 rpm மற்றும் 17.2 Nm டார்க்கினை 6000 rpm சுற்றில் வழங்கும் புதிய ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 200cc 4 ஸ்டோர்க் என்ஜினை பெற்றிருக்கும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றிருக்கும்.

காட்சிப்படுத்தப்பட்ட மாடலின் தோற்றத்துடன் கூடுதலாக சில ஸ்போர்ட்டிவ் மாறுதல்களை பெற்று இருபக்க டயர்களிலும் டிஸ்க்பிரேக் , ஏபிஎஸ் ஆப்ஷனலாக இடம்பெறலாம். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரினை பெற்றிருக்கும்.

hero xtreme 200s 3

மல்டி ஸ்போக் அலாய் வீல் , எல்இடி பைலட் விளக்கு , ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் , ஹாலெஜன் முகப்பு விளக்கு , டிஜிட்டல் இன்ஸ்டூரூமென்ட் கிளஸ்ட்டரை பெற்று விளங்கும். வரவுள்ள புதிய கேடிஎம் டியூக் 200 பைக்கிற்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தும் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ள ஹீரோ எக்ஸ்டீரிம் நெக்ஸ்ட் பைக் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி , பல்சர் 200 ஏஎஸ் போன்ற மாடல்களுடன் சந்தையை பகிர்ந்துகொள்ளும்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் நெக்ஸ்ட் பைக் விலை ரூ.95,000 – 1,10,000 விலைக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

hero xtreme 200s 1 hero xtreme 200s hero xtreme 200s