முதன்முறையாக 50 லட்சம் இலக்கை கடந்து ஹோண்டா டூவீலர் புதிய சாதனை

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் முதன்முறையாக இந்திய சந்தையில் 50, 08,103 அலகுகளை விற்பனை செய்து புதிய சாதனையை 16-17 நிதி ஆண்டில் படைத்துள்ளது.

ஹோண்டா விற்பனை

நமது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளாரான ஹோண்டா தனது 2016-2017 ஆம் நிதி வருடத்தின் முடிவில்  50, 08,103 ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதனை கடந்த 15-16 நிதி ஆண்டில் ஒப்பீடுகையில் கூடுதலாக 12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 15-16 வருடத்தில் 44, 83,462 ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை விற்பனை செய்திருந்தது.

2016-2017 நிதி ஆண்டில் விற்பனை செய்யபட்டுள்ள 50.08 லட்சம் வாகனங்களில் 33,51,604 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 15-16 ஆண்டைவிட 16 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும். 15-16ல் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டரின் எண்ணிக்கை 28,92,480 ஆகும்.

FY 2016-17 FY 2015-16 வளர்ச்சி
50, 08,103 44, 83,462 12%

மார்ச் மாத விற்பனை விபரம் விரைவில்

Recommended For You