5 மாதங்களில் 1 லட்சம் ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனை

0

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கிரேஸியா ஸ்கூட்டரை அறிமுகம் செய்த 5 மாதங்களில் 1 லட்சம் ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

 ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்

கடந்த நவம்பர் 2017யில் அறிமுகம் செய்யப்பட்ட கிரேஸியா ஸ்கூட்டர் அறிமுகம் முதலே மிக சிறப்பான ஆதரவை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்ற நிலையில் , கடந்த ஐந்தே மாதங்களில் சுமார் 1 லட்சம் விற்பனை எண்ணிக்கையை சாதாரணமாக கடந்துள்ளது.

Google News

கிரேஸியா ஸ்கூட்டர் மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தும் வகையில் எல்இடி ஹெட்லைட் பெற்று கலர்ஃபுல்லான நிறங்களில் நவீன தலைமுறையினர் விரும்பும் வகையிலான அம்சங்களை பெற்று இளையோரின் மத்தியில் அமோக ஆதரவை கிரேஸியா ஸ்கூட்டர் பெற்றது.

ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 125சிசி எஞ்சின் தற்போது கிரேஸியா ஸ்கூட்டரிலும் சேர்க்கப்பட்டுள்ளது. கிரேசியா மாடலில் ஹெச்இடி நுட்பத்தை பெற்ற 8.52 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.9 cc எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.54 Nm ஆகும். இதில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

கிரேஸியா ஸ்கூட்டரின் தோற்ற அமைப்பில் மிகவும் ஸ்டைலிஷான வி வடிவ அமைப்பில் எல்இடி ஹெட்லைட் பெற்றதாக நவீனத்துவமான அம்சங்களுடன் 4 விதமான லாக்கர்களை திறக்க வகையிலான ஸ்மார்டர் லாக் வழங்கப்பட்டிருப்பதுடன், மொபைல் போன் வைப்பதற்கான யூட்டிலிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் 12 அங்குல வீல் பெற்றுள்ள கிரேசியா மாடலில் முன்புறத்தில் 190 மிமீ டிஸ்க் பிரேக் அல்லது 130 மிமீ டிரம் பெற்றதாகவும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் அம்சத்துடன் காம்பி பிரேக் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

கிரேஸியா ஸ்கூட்டரின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை விபரம் வேரியன்ட் வாரியாக பின்வருமாறு ;-

Honda Grazia Standard Honda Grazia Alloy Honda Grazia Deluxe
ரூ.60,277 ரூ.62,208 ரூ.64,649

(சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை )

ஹெச்எம்எஸ்ஐ (HMSI) நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் யாத்வீந்தர் குலெரியா கூறுகையில், ‘மேம்பட்ட தொழில்நுட்பங்கள், தோற்றப் பொலிவும் கொண்ட கூடுதல் சக்தி வாய்ந்த ஸ்கூட்டர்களை விரும்பும் இளைஞர்கள் கிரேஸியா ஸ்கூட்டரை விரும்பி வாங்குவதால் அவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.