ஹோண்டா கிரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது

0

honda grazia 125 sports edition

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கிரேஸியா ஸ்கூட்டரில் ஸ்போர்ட்ஸ் எடிசன் என்ற பெயரில் கூடுதலான ஸ்டைலிங் அம்சங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு ரூ.85,455 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற டிஸ்க் பிரேக் பெற்ற மாடலை விட ரூ.1,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.

Google News

மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல், தொடர்ந்து (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8.14 hp பவர் மற்றும் 10.3 NM டார்க் வழங்குகின்றது. இதில் வி-மேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது.

கிரேஸியாவில் முழுமையான டிஜிட்டல் கன்சோலை பெற்றுள்ள இந்த மாடலில் மூன்று ஸ்டெப் ஈக்கோ ஸ்பீடு இன்டிகேட்டர், இரு புறங்களிலும் பார் டைப் டாக்கோமீட்டர், கடிகாரம், நிகழ் நேர எரிபொருள் இருப்பிற்கான மைலேஜ், இரண்டு டிரீப்மீட்டர், ஓடோமீட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

மற்றபடி வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்திலும், மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், பின்புறத்தில் டிரம் பிரேக் மற்றும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. 10 அங்குல பின்புற அலாய் வீல் மற்றும் 12 அங்குல அலாய் வீல் முன்புறமும்,  ஸ்டைலிஷான எல்இடி ரன்னிங் விளக்கு, எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டிருக்கின்றது.

புதிதாக கிரேஸியா ஸ்போர்ட்ஸ் வேரியண்டில் நைட்ஸ்டார் பிளாக் மற்றும் ஸ்போர்ஸ் சிவப்பு என இரு நிறங்களை கொண்டுள்ளது. இதில் புதுவிதமான பாடி கிராபிக்ஸ் கொண்டு ஸ்டைலிஷாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

2021 Honda Grazia விலை பட்டியல்

2021 Honda Grazia Drum – ரூ.78,030

2021 Honda Grazia Disc – ரூ.85,355

Honda Grazia Sports – ரூ.86,355

(எக்ஸ்ஷோரூம் சென்னை)

Honda Grazia Sports Edition Sports Red