இந்தியாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் காட்சிக்கு வந்தது – India Bike Week 2019

0

ktm 390 adventure

கேடிஎம் நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியா பைக் வீக் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 மாசு உமிழ்வு என்ஜினை பெற்ற இந்த மாடலின் விலை விவரம் ஜனவரி 2020-ல் அறிவிக்கப்பட உள்ளது.

Google News

பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜின் பொருத்தப்பட்டு 9,500 ஆர்பிஎம் சுழற்சியில் 43 பிஎஸ் பவர், 7,250 ஆர்பிஎம் சுழற்சியில் 37 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாகும். 6 வேக டிரான்ஸ்மிஷன் பெற உள்ளது. கே.டி.எம் 390 அட்வென்ச்சர் பைக் புனேவுக்கு அருகிலுள்ள பஜாஜின் சக்கான் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது.

மிக சிறப்பான ட்ரெயின் பயணத்திற்கு ஏற்ப 170 மிமீ பயணிக்கும் தன்மையுடன் வடிமைக்கப்பட்ட இன்வெர்டேட் முன்புற ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை இரண்டுமே WP நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது.  முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல பின்புற அலாய் மற்றும் வீல்களை கொண்டுள்ளது. ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பயணத்துக்கு ஏற்ப டயரினை கொண்டுள்ளது. பிரேக்குகளில் முன்புறத்தில் ரேடியல் காலிபருடன் கூடிய 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் ஆகியவை பெற்றுள்ளது.

இந்தியாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடல் ரூ. 3 லட்சத்தில் விற்பனைக்கு ஜனவரியில் வெளியாகலாம். இதுதவிர இந்நிறுவனம் கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் மாடலும் காட்சிப்படுத்தியுள்ளது.