புதிய பஜாஜ் பல்சர் 125 ஸ்பை படங்கள் வெளியானது

0

Bajaj Pulsar N250 1

சமீபத்தில் விற்பனைக்கு வந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் N250 மற்றும் F250 மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய வரிசையிலான பஜாஜ் 125 முதல் 200 வரையிலான மாடல்களுக்கு இணையான தோற்றத்தை பெறும் முதல் மாடலாக பல்சர் 125 அல்லது பல்சர் 150 மாடல் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Google News

சமீபத்தில் வெளியாகியுள்ள சாலை சோதனை ஓட்ட படங்களில் இந்த பைக்கின் தோற்ற அமைப்பில் குறிப்பாக பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் ஏர் கூல்டு எஞ்சின் ஆக அமைந்து இருக்கின்றது. எனவே, இது 125சிசி அல்லது 150 சிசி இன்ஜின் ஆக இருக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது.

சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற குறைந்த சிசி எஞ்சின் கொண்ட மாடல் ஆனது சைட் பேனல் மற்றும் பெட்ரோல் டேங்க் எக்ஸ்டென்ஷன் உள்ளிட்ட அமைப்புகளில் பல்சர் N250 போல அமைந்திருக்கின்றது.

இரு பிரிவுகளைக் கொண்ட இருக்கைகள் மற்றும் பின்புறத்தில் உள்ள எல்இடி டெயில் விளக்கு போன்றவற்றை பெறுகின்றது இந்த மாடல் மற்றும் பொலிவான தோற்றம் பெறுகின்றது. எஞ்சின் உட்பட வேறு எந்தவிதமான தகவலும் தற்பொழுது வெளியாகவில்லை.

bajaj Pulsar 125 spied

புதிய 2023 பஜாஜ் பல்சர் 125 அல்லது பல்சர் 150 மாடல் 2023 ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு புதிய பெயர்களை காப்புரிமை பெற்றுள்ளது. அவை பஜாஜ் பல்சர் எலான் ( Pulsar Elan and Pulsar Eleganza) மற்றும் பஜாஜ் பல்சர் எலீகென்ஸ் ஆகும்.

image source