இந்திய சந்தையில் கிடைக்கின்ற மலிவு விலை 125சிசி பைக் பிரிவில் உள்ள 6 மாடல்களின் ஆன் ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.
குறைந்த விலை 125cc பைக் பட்டியலில் பஜாஜ் CT125X, ஹோண்டா ஷைன் 125, ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர், ஹீரோ கிளாமர் 125, ஹோண்டா SP125, மற்றும் பஜாஜ் பல்சர் 125 ஆகிய பைக்குகள் இடம்பெற்றுள்ளன.
2024 Bajaj CT125X
இந்தியாவின் மிகவும் மலிவு அல்லது குறைந்த விலையில் கிடைக்கின்ற 125சிசி மாடலாக உள்ள பஜாஜ் ஆட்டோவின் சிடி125 எக்ஸ் பைக்கில் 10.9 Ps பவர் மற்றும் 11Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற 124.4cc என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் உடன் கிடைக்கின்றது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் பெற்று முன்பக்க டயரில் டிஸ்க் அல்லது டிரம் என இரு ஆப்ஷனை பெற்று கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், அனலாக் கிளஸ்ட்டர், 17 அங்குல வீல் உடன் ட்யூப்லெஸ் டயர் உள்ள CT125X பைக்கின் விலை ரூ.74,240 முதல் ரூ.77,440 வரை (எக்ஸ்ஷோரூம்) உள்ளது.
2024 பஜாஜ் CT125X ஆன்ரோடு விலை பட்டியல்:-
- CT125X Drum – INR 89,652
- CT125X Disc – INR 93,850
2024 Honda Shine 125
இந்திய சந்தையில் அதிக வாங்கப்படுகின்ற 125cc மாடலாக உள்ள ஹோண்டாவின் ஷைன் 125 பைக்கில் 10.74 Ps பவர் மற்றும் 11Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற 123.94cc esp என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் உடன் கிடைக்கின்றது.
இந்த மாடலில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் ஆனது முன்புறத்தில் பெற்று பின்புறத்தில் 130 மிமீ டிரம் மட்டுமே பெற்று கம்பைண்டு பிரேக்கிங் உடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பருடன் 18 அங்குல வீல் பெற்றுள்ள சைன் 125 விலை ரூ.82,500 முதல் ரூ.86,500 (எக்ஸ்ஷோரூம்) வரை உள்ளது.
2024 ஹோண்டா சைன் 125 ஆன்ரோடு விலை பட்டியல்:-
- Shine 125 Drum – INR 1,01,565
- Shine 125 Disc – INR 1,06,432
2024 Hero Super Splendor
ஹீரோ நிறுவனத்தின் சூப்பர் ஸ்பிளெண்டர் 125 பைக் மாடலில் இடம்பெற்றுள்ள எஞ்சின் 10.87 Ps பவர் மற்றும் 10.6Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற 124.7cc என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் உடன் கிடைக்கின்றது.
சூப்பர் ஸ்பிளெண்டரில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் ஆனது முன்புறத்தில் பெற்று பின்புறத்தில் 130 மிமீ டிரம் மட்டுமே பெற்று கம்பைண்டு பிரேக்கிங் உடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பருடன் டிஜி அனலாக் கிளஸ்ட்டர், 18 அங்குல வீல் பெற்றுள்ளது.
கூடுதலாக எக்ஸ்டெக் வேரியண்ட் ஆனது எல்இடி ஹெட்லேம்ப், யூஎஸ்பி சார்ஜி போர்ட், ஹீரோ கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டதாகவும் நேவிகேஷன் வசதிகளையும் வழங்குகின்ற குறைந்த விலை சூப்பர் ஸ்பிளெண்டர் 125 விலை ரூ.83,548 முதல் ரூ.90,878 (எக்ஸ்ஷோரூம்) வரை உள்ளது.
2024 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் 125 ஆன்ரோடு விலை பட்டியல்:-
- SUPER SPLENDOR Drum – INR 98,654
- SUPER SPLENDOR Disc – INR 1,03,543
- SUPER SPLENDOR XTEC Drum – INR 1,06,543
- SUPER SPLENDOR XTEC Disc – INR 1,11,085
2024 Hero Glamour 125
சற்று மாறுபட்ட ஸ்டைலிங் அம்சத்தை பெற்றுள்ள கிளாமர் 125 பைக்கில் 10.87 PS பவர் மற்றும் 10.6Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற 124.7cc என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் உடன் கிடைக்கின்றது.
இந்த மாடலிலும் 18 அங்குல அலாய் வீல் பெற்று டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் பெற்று முன்பக்க டயரில் டிஸ்க் அல்லது டிரம் என இரு ஆப்ஷனை பெற்று கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் உள்ளது.
சாதரண கிளாமரை விட மாறுபட்ட டிசைன் கொண்டுள்ள எக்ஸ்டெக் வேரியண்டில் எல்இடி ஹெட்லேம்ப், கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுகின்ற 2024 கிளாமர் 125 ஆரம்ப விலை ரூ. 85,048 முதல் ரூ. 95,398 வரை (எக்ஸ்ஷோரூம்) ஆகும்
2024 ஹீரோ கிளாமர் 125 ஆன்ரோடு விலை பட்டியல்:-
- New Glamour Drum – INR 1,03,561
- New Glamour Disc – INR 1,06,653
- New Glamour XTEC Drum – INR 1,09,054
- New Glamour XTEC Disc – INR 1,14,676
2024 Honda SP125
ஷைன் 125 மாடலின் அடிப்படையில் மாறுபட்ட ஸ்டைலிங் அம்சத்தை பெற்றுள்ள ஹோண்டா எஸ்பி125 பைக்கில் 10.74 Ps பவர் மற்றும் 11Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற 123.94cc esp என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் உடன் கிடைக்கின்றது.
SP125 பைக் மாடலில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் ஆனது முன்புறத்தில் பெற்று பின்புறத்தில் 130 மிமீ டிரம் மட்டுமே பெற்று கம்பைண்டு பிரேக்கிங் உடன் டிஜிட்டல் கிளஸ்ட்டர், சைடு ஸ்டாண்டு கட் ஆஃப் வசதி பெற்றுள்ளது. கூடுதலாக ஸ்போர்ட்ஸ் வேரியண்டில் பாடி கிராபிக்ஸ் உள்ளிட்ட மாற்றங்கள் உள்ள ஹோண்டா எஸ்பி125 விலை ரூ.88,829 முதல் ரூ. 93,379 ஆக (எக்ஸ்ஷோரூம்) உள்ளது.
2024 ஹோண்டா SP125 ஆன்ரோடு விலை பட்டியல்:-
- SP 125 Drum – INR 1,09,546
- SP 125 Disc – INR 1,14,651
- SP 125 Sports Disc – INR 1,15,453
2024 Bajaj Pulsar 125
பிரபலமான பஜாஜ் பல்சர் 125 பைக்கில் நியான் ஒற்றை சீட் மற்றும் கார்பன் ஃபைபர் எடிசன் பெற்ற இந்த பைக்கில் 11.8 Ps பவர் மற்றும் 10.8Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற 124.4cc என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் உடன் கிடைக்கின்றது.
மிக நேர்த்தியாக அமைந்துள்ள இந்த பைக்கில் ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பிளிட் இருக்கை ஆப்ஷனுடன் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் பெற்று டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பருடன் பல்சர் 125 பைக்கின் விலை ரூ.84,115 முதல் ரூ.97,082 வரையில் (எக்ஸ்ஷோரூம்) உள்ளது.
2024 பஜாஜ் பல்சர் 125 ஆன்ரோடு விலை பட்டியல்:-
- Pulsar 125 Carbon Fiber – INR 1,02,654
- Pulsar 125 Single Seat – INR 1,12,543
- Pulsar 125 Split Seat – INR 1,16,675
2024 Top 125cc Affordable Bikes on road price table
125cc Bikes | Ex-showroom Price | on-road Price |
---|---|---|
Bajaj CT125X | ₹ 74,240 – ₹ 77,440 | ₹ 89,652-₹ 93,850 |
Honda Shine 125 | ₹ 82,500 – ₹ 86,500 | ₹ 1.00 -1.07 லட்சம் |
Hero Super Splendor | ₹ 83,548 – ₹ 90,878 | ₹ 98,000-1.12 லட்சம் |
Hero Glamour | ₹ 85,048 – ₹ 95,398 | ₹ 1.04-1.15 லட்சம் |
Honda SP125 | ₹ 88,829- ₹ 93,379 | ₹ 1.10 – ₹ 1.16 லட்சம் |
Bajaj Pulsar 125 | ₹ 84,115 -₹ 97,082 | ₹ 1.03-1.17 லட்சம் |
(All price Tamil Nadu)