Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2023 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
March 6, 2023
in பைக் செய்திகள்

125சிசி சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில் Xtec ப்ளூடூத் சார்ந்த கனெக்ட்டிவ் வசதிகளை பெற்ற மாடல் ₹ 85,068 ஆக விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. புதிய மாடல் OBD 2 சார்ந்த என்ஜின் மேம்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு ஆப்ஷன்களையும் பெற்றுள்ள புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில் கனெக்ட்டிவ் நுட்பம் சார்ந்த வசதிகளின் மூலம் முழுமையான டிஜிட்டல் சார்ந்த கிளஸ்ட்டர் வாயிலாக பல்வேறு அறிக்கைகள் மற்றும் யூஎஸ்பி சார்ஜர் போர்ட் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது.

2023 Hero Super Splendor Xtec

ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள புதிய சூப்பர் ஸ்பிளெண்டரில் மேம்படுத்தப்பட்ட OBD 2 அம்சத்தை பெற்ற அதே 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 10.7 bhp பவர் மற்றும் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்பிளெண்டர் Xtec மாடலின் ஸ்டைலிங் சார்ந்த அம்சங்களில் முந்தைய பைக்கிலிருந்து பெரிதாக மாற்றமில்லாமல் வந்துள்ளது. மேலும், புதிய எல்இடி ஹெட்லைட் சேர்க்கப்பட்டு லோ பீம் மற்றும் ஹை பீம் என இரண்டுக்கும் தனித்தனியான விளக்குகள் கொடுக்கப்பட்டு எல்இடி ரன்னிங் விளக்குகளை கொண்டுள்ளது. ஒற்றை இருக்கை, கிராப் ரெயில், ஹாலெஜன் டர்ன் இண்டிகேட்டர் மற்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. கூடுதலாக இந்த பைக்கில் கேண்டி பிளேசிங் ரெட் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே நிறங்களை பெற்று வருகிறது.

டயமண்ட் பிரேம் சேஸ் பெற்றுள்ள இந்த பைக்கில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் இரட்டை பின்புற ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர் உடன் பிரேக்கிங் அமைப்பில், சிபிஎஸ் (கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்) உடன் பின்பக்க டிரம் யூனிட்டுடன் முன்புறத்தில்வ டிஸ்க் பிரேக் அல்லது டிரம் பிரேக் என இரு வித வேறுபாட்டை பெறுகிறது. 18 அங்குல அலாய்கள் 80/100 முன் மற்றும் 100/80 பின்புற டயர்களில் கொண்டுள்ளது.

ஹீரோ Xtec எனப்படுவது என்பது புளூடூத் இணைப்பு மற்றும் புதிய எல்சிடி டிஸ்பிளே பெற்ற முழு டிஜிட்டல் கன்சோலையும் இணைத்து சூப்பர் ஸ்பிளெண்டரில் உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது இதன் வாயிலாக தவறவிட்ட அழைப்புகள்/SMS விழிப்பூட்டல்கள் மற்றும் பல்வேறு வாசிப்புகளில் உள்ள பேக்குகளுக்கான அணுகலை வழங்குகிறது. கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டிரிப்மீட்டர், எரிபொருள் அளவு மற்றும் மைலேஜ் ஆகியவற்றுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு கீழே USB சார்ஜிங் போர்ட் உள்ளது.

சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா சிபி ஷைன் 125, டிவிஎஸ் ரைடர் 125, மற்றும் பஜாஜ் பல்சர் 125 போன்றவை இடம்பெற்றுள்ளது.

2023 Hero Super Splendor Xtec Price

இந்தியாவில் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் விலை ₹ 85,068 (டிரம்) மற்றும் ₹ 89,068 (டிஸ்க்). (ex-showroom chennai)

SpecificationsHero Super Splendor XTech
Engine TypeAir-cooled, 4-stroke, Single Cylinder OHC
Displacement124.7 cc
Maximum Power10.7 hp @ 7,500 rpm
Maximum Torque10.6 Nm @ 6,000 rpm
Bore x Stroke52.4 mm x 57.8 mm
Compression Ratio10.8:1
Fuel SystemFuel Injection
IgnitionDC – Digital CDI
Transmission5-speed constant mesh
ClutchWet, Multi-Plate
Top Speed95 km/h (approx.)
Mileage68 km/l (approx.)
Starting SystemElectric/Kick
FrameTubular Double Cradle
Suspension (Front)Telescopic Hydraulic Shock Absorbers
Suspension (Rear)5-Step Adjustable Hydraulic Shock Absorbers
Brakes (Front)240 mm Disc / 130 mm Drum
Brakes (Rear)130 mm Drum
Tyre Size (Front)80/100-18
Tyre Size (Rear)100/80 -18
Battery12 V – 3 Ah (MF Battery)
Length2,059 mm
Width743 mm
Height1,127 mm
Wheelbase1,273 mm
Ground Clearance180 mm
Fuel Tank Capacity10 litres
Kerb Weight122 kg

2023 சூப்பர் ஸ்பிளெண்டர் Xtech ஆன்-ரோடு சென்னை விலை விபரம் ?

புதிதாக வந்துள்ள ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக் விலை ₹ 1,01,456 முதல் ₹ 1,06,671

2023 சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பவர் & டார்க் விபரம் ?

OBD 2 அம்சத்தை பெற்ற அதே 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 10.7 bhp பவர் மற்றும் 10.6 Nm ஆகும்.

2023 சூப்பர் ஸ்பிளெண்ர் பைக் மைலேஜ் லிட்டருக்கு ?

சூப்பர் ஸ்பிளெண்ர் பைக் மைலேஜ் லிட்டருக்கு 56 கிமீ தரக்கூடும்

Tags: Hero super splendor
Previous Post

6 விதமான கஸ்டமைஸ் ஹோண்டா CB350 பைக் ஆக்செரீஸ் அறிமுகம்

Next Post

எலெக்ட்ரிக் பைக் தயாரிக்க ஜீரோ உடன் ஹீரோ கூட்டணி

Next Post
எலெக்ட்ரிக் பைக் தயாரிக்க ஜீரோ உடன் ஹீரோ கூட்டணி

எலெக்ட்ரிக் பைக் தயாரிக்க ஜீரோ உடன் ஹீரோ கூட்டணி

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version