ரிவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் மாதிரிப்படம் வெளியானது

ரிவோல்ட் ஸ்மார்ட் பைக்

வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு வரவுள்ள ரிவோல்ட் மோட்டாரின் முதல் மின் மோட்டார்சைக்கிள் மாதிரிப்படத்தை ரிவோல்ட் நிறுவனம் அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

விற்பனையில் உள்ள ஸ்டைலிஷான பெட்ரோல் மாடல்களுக்கு இணையான தோற்ற பொலிவினை கொண்டதாக ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளடக்கிய மோட்டார்சைக்கிள் மாடலாக ரிவோல்டின் பைக் விளங்க உள்ளது.

ரிவோல்ட் ஸ்மார்ட் பைக் விபரம்

முதல்முறையாக இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட் டெக்னாலாஜி வசதிகளை உள்ளடக்கிய மோட்டார் பைக் மாடலாக வலம் வரவுள்ள இந்த பைக்கில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அம்சத்தை பெறும் முதல் இந்திய மாடலாக இது இருக்கும்.

இந்த பைக்கின் பவர், டார்க் மற்றும் சிங்கிள் சார்ஜ் தொலைவு உள்ளிட்ட விபரங்கள் இதுவரை அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முன்பாக வெளியான தகவலின் அடிப்படையில் சிங்கிள் சார்ஜ் மூலம் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் மாடல் ஒரு சிங்கிள் சார்ஜ் மூலம் 150 கிமீ பயணிக்க திறன் கொண்டதாக விளங்கும் என கூறப்படுகின்றது.

ரிவோல்ட் நிறுவன தலைமை மோட்டார் டிசைன் வடிவமைப்பாளர் சிவம் ஷர்மா, கூறுகையில், “இது ஒரு அற்புதமான செயல்முறை ஆக விளங்கும், எங்களது முதல் மின்சார பைக் வடிவமைத்தல் மற்றும் முற்றிலும் வேறுபட்ட பலதரப்பட்ட டைனமிக்ஸ் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டதாகும். உற்பத்திக்கான தொழில்நுட்ப வலிமை கடந்து, வாகனத்தின் ரைடிங் பொசிஷன் மற்றும் கம்யூட்டர் எனப்படும் தினசரி பயணத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு இதனை உருவாக்க ஆறு மாதங்கள் தேவைப்பட்டது, மூன்று வித்தியாசமான முறையில் மற்றும் ஏழு விதமான மாதிரி வரைபடங்களை கொண்டு,  இறுதியில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடலை உருவாக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மின்சார இரு சக்கர வாகனம்,  வழக்கமான ICE (பெட்ரோல்) பைக் செயல்திறன், வடிவம் அல்லது அழகியல் போன்றவற்றுக்கு குறைந்ததாக இருக்காது. மேலும் பெர்ஃபாமென்ஸ் மாடல்களை போன்ற ஏரோடைனமிக்ஸ்  அம்சத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரிவோல்ட் தெரிவித்துள்ளது.