Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2500க்கு மேற்பட்ட புக்கிங் பெற்ற ரிவோல்ட் ஆர்வி 400 பைக்

by automobiletamilan
July 11, 2019
in பைக் செய்திகள்

revolt rv400 tamil

மைக்ரோமேக்ஸ் நிறுவன தலைவரின் ரிவோல்ட் இன்டெல்லிகார்ப்பின், முதல் ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் முன்பதிவு கடந்த ஜூன் 25 முதல் ரிவோல்ட்டின் இணையதளத்திலும், தற்போது அமேசான் இந்தியா தளத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கிற்கான முன்பதிவு 2500 க்கு மேற்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மணிக்கு 85 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்ற இந்த மோட்டார்சைக்கிளில் உள்ள பேட்டரி மூலம் சிங்கிள் சார்ஜ் மூலம் அதிகபட்சமாக 156 கிமீ பயணிக்கலாம் என ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் எவ்விதமான ஒலியும் எழுப்பாது. ஆனால் இந்த மாடலில் செயற்கை முறையான வகையில் ஒலியை எக்ஸ்ஹாஸ்ட் எழுப்பும், மேலும் நமது விருப்பதுக்கு நான்கு வகையான ஒலியை முதற்கட்டமாக வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் மேலும் கூடுதலான ஒலி எழுப்பும் ஆப்ஷனை வழங்க உள்ளது.

இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பெற்று முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக விளங்க உள்ளது.

156 கிலோ எடை கொண்ட ஆர்வி 400 பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட், முழு டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், 4ஜி ஆதரவு கனெக்ட்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நுட்பத்தின் மூலம், உங்களுடைய ரைடிங் பேட்டர்ன் முறையில் அதற்கு ஏற்ப பேட்டரியின் சார்ஜிங் பராமிப்பினை மேற்கொள்வதுடன், எவ்விதமான கோளாறுகளும் இன்றி பயணத்தை மேற்கொள்ள உதவுகின்றது.

ரூ.1 லட்சம் விலையில் ரிவோல்ட் ஆர்.வி 400 பைக் விற்பனைக்கு கிடைக்கலாம்.

மேலதிக விபரங்கள் பற்றி ஆர்வி400 பைக் பற்றி அறிந்து கொள்ளலம்.

 

Tags: RevoltRevolt RV400ரிவோல்ட்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version