ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 டீசர் வெளியானது

0

super meteor 650 teased

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 650சிசி என்ஜின் பெற்ற மாடலாக சூப்பர் மீட்டியோர் 650 பைக் EICMA 2022 அரங்கில் காட்சிப்படுத்த உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் வீடியோ டீசரை வெளியிட்டுள்ளது.

Google News

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கினை நவம்பர் 8 ஆம் தேதி 2022 EICMA அரங்கில் இத்தாலி நாட்டில் வெளியிடப்பட உள்ளது. EICMA 2022-ல் வெளியிடப்பட்ட அவர்களின் ஒரே பெரிய மோட்டார் சைக்கிள் இதுவாக இருக்கலாம். இது மட்டுமல்லாமல் கூடுதலாக சில முக்கிய பாடல்களை வெளியிடக்கூடும். ராயல் என்ஃபீல்டின் 650சிசி வரிசையில் சூப்பர் மீடியர் 650 மூன்றாவது மோட்டார்சைக்கிளாக வரவுள்ளது.

தற்போது வரவுள்ள மீட்டியோர் 650 க்ரூஸர் என்ஜினை இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 ஆகியவற்றில் இருந்து பெறலாம். சூப்பர் மீட்டியோர் 650 க்ரூஸர் இன்டர்செப்டரை விட சற்று அதிகமாகவே விலை நிர்ணயம் செய்யப்பட்டலாம்.

இந்திய சந்தையை பொறுத்தவரை, வரும் நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெற உள்ள 2022 ரைடர் மேனியா அரங்கில் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 விற்பனைக்கு வெளிவரவுள்ளது.