விரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்

0

gixxer 250

நேக்டூ ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் ரக சுஸுகி ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் 150 மாடல் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த மாடலின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Google News

முன்பாக விற்பனக்கு வந்த ஜிக்ஸர் SF 250 மாடல் டெலிவரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதன் அடிப்படையிலான நேக்டு வெர்ஷன் படம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

சுஸுகி ஜிக்ஸர் 250 வருகை

ரூ.1.70 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட ஜிக்ஸர் எஸ்எஃப் 250 மாடலை தொடர்ந்து வெளியாக இருக்கின்ற நேக்டூ வெர்ஷன் விலை ரூ.15,000 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.1.55 லட்சம்  விற்பனையக விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இதுதவிர, தொடக்கநிலை 155சிசி என்ஜின் பெற்ற 2019 ஜிக்ஸர் 150 பைக் மாடல் ரூ. 97,000 விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

சுசுகி ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS – Suzuki Oil Cooling System) நுட்பம் பெற்ற 249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் மைலேஜ் லிட்டருக்கு 38.5 கிமீ ஆகும்.

gixxer 250image credit – motoroids

அடுத்தப்படியாக, பெரிதும் என்ஜினில் மாற்றங்கள் இல்லாமல் ஜிக்ஸர் 150 மாடல் 14.1 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில்  ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

ஜிக்ஸர் எஸ்எஃப் 250 மாடலில் உள்ள ஃபேரிங் பேனல்களை தவிரத்து மற்றபடி ஒரே மாதிரியாக இரு மாடல்களும் அமைந்திருக்கும். அடுத்த சில வாரங்களுக்குள் நேக்டு வெர்ஷனை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.