Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய நிறங்களில் சுஸூகி ஜிக்ஸெர் பைக்குகள் வெளியானது

by automobiletamilan
October 1, 2020
in பைக் செய்திகள்

சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷன் நூற்றாண்டினை கொண்டாடி வரும் நிலையில் ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் 250 பைக்குகளில் புதிதாக தலா இரண்டு நிறங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ரெட்ரோ ஸ்டைல் மாடல்களின் நிறத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள வண்ணங்கள் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது.

ஜிக்ஸெர் SF 250 பைக்கில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ட்ரிடான் ப்ளூ/சில்வர் கலர் மிக சிறப்பாக உள்ளது. இது முந்தைய ரெட்ரோ ரேசிங் மாடல்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. ஜிக்ஸர் 250 மாடலில் புதிய ரேசிங் பாடி கிராபிக்ஸ் உடன்  ட்ரீடான் மெட்டாலிக் ப்ளூ நிறத்தை கொண்டுள்ளது.

155சிசி இன்ஜின் பெற்ற ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் SF என இரு மாடல்களும் புதிய பாடி கிராபிக்ஸ் உடன் சிவப்பு நிறத்தை பெற்றுள்ளது. மற்றபடி கூடுதலாக ஜிக்ஸர் மாடல்  ட்ரீடான் மெட்டாலிக் ப்ளூ நிறத்தை கொண்டுள்ளது.

2021 Suzuki Gixxer விலை

Gixxer –

Glass Sparkle Black, Metallic Triton Blue (new), Pearl Mira Red (new) – ரூ. 1,14,500

Gixxer SF –

Glass Sparkle Black, Metallic Triton Blue, Pearl Mira Red (new) – ரூ. 1,24,970

Gixxer 250 –

Metallic Matte Black, Metallic Triton Blue (new) – ரூ.1,65,441

Gixxer SF 250

Metallic Matte Black – ரூ.1,76,140

Metallic Triton Blue – ரூ. 1,76,941

Triton Blue/Silver (new) – ரூ. 1,76,941

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

13.6 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் SF வரிசை பைக் என்ஜினில்  ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 13.8 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

web title : Suzuki Gixxer and Gixxer SF Range Gets New Colour – motorcycle news in tamil

Tags: Suzuki Gixxer 250Suzuki Gixxer SF
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version