இருவண்ண கலவையில் சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்..!

0

இந்தியா சுசுகி மோட்டார்சைக்கிள் பிரிவு புதிதாக இருவண்ண கலவையில் சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் மாடலை சென்னை எக்ஸ்-ஷோரூம் ரூ.52,688 விலையில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் வந்துள்ள லெட்ஸ் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை.

Suzuki Lets dual tone

Google News

சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர்

SEP எனப்படும் சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்ற 112.8 சிசி எஞ்சினை பெற்றுள்ள லெட்ஸ் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 8.4bhp பவரை வெளிப்படுத்துவதுடன், 8.8 Nm டார்க்கினை வழங்கி சிவிடி கியர்பாக்ஸ் வாயிலாக சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்கின்றது.

Suzuki Lets dual tone blue

110சிசி சந்தையில் உள்ள  ஆக்டிவா-ஐ , ஸ்கூட்டி ஸெஸ்ட், யமஹா ரே போன்ற மாடல்களுக்கு மிகவும் சவாலான ஸ்கூட்டர்களில் ஒன்றான லெட்ஸ் மாடலில் புதிதாக வந்துள்ள மூன்று இரு வண்ண கலவைகளின் விபரம் பின் வருமாறு ;- நீலம் மற்றும் மேட் கருப்பு கலவை, ஆரஞ்சு மற்றும் மேட் கருப்பு கலவை, கிளாஸ் ஸ்பார்க்கிள் கருப்பு நிறம் போன்ற நிறங்களில் கிடைக்க உள்ளது.

Suzuki Lets dual tone red

இரு டயர்களிலும் 120 மிமீ கொண்ட டிரம் பிரேக் ஆப்ஷனுடன் 5.2 லிட்டர் கொள்ளவு பெற்ற பெட்ரோல் டேங்க் பெற்ற மாடலாக கிடைக்கின்ற இந்த மாடலில் உள்ள சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பம் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு லெட்ஸ் ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 63 கிமீ ஆகும். இந்த ஸ்கூட்டரில் மொபைல் சாக்கெட் மற்றும் இருக்கை அடியிலில் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Suzuki Lets dual tone black

சுசுகி லெட்ஸ் விலை பட்டியல் (தமிழகம் & புதுச்சேரி)

தமிழ்நாடு லெட்ஸ் விலை

மோனோ டோன் ரூ. 51,663

டூயல் டோன் ரூ. 52,688

புதுச்சேரி லெட்ஸ் விலை

மோனோ டோன் ரூ. 48,933

டூயல் டோன் ரூ. 49,911