டார்க் T6X எலக்ட்ரிக் பைக் ஸ்பை படங்கள் வெளியானது

0

 

2019 Tork T6X Launch

இந்தியாவின் டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம், பேட்டரியில் இயங்கும் டார்க் T6X எலக்ட்ரிக் பைக் மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக் விலை ரூ. 1.50 லட்சம் விலையில் வெளியாகலாம்.

டார்க் T6X பைக்

முதன்முறையாக 2016 ஆம் ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்ட டார்க் டி6எக்ஸ் பேட்டரி பைக்கின் முழுமையான உற்பத்தி நிலை சோதனை ஓட்ட படங்களை இணையத்தில் வெளியாகியுள்ளது.

125 சிசி – 150 சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் சந்தையில் மிக சிறப்பான எலக்ட்ரிக் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ள டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக் உச்ச வேகம் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

Tork T6X Electric Motorcycle spy

மேலும் டி6 எக்ஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளள லித்தியம் ஐன் பேட்டரி ஒரு மணி நேரத்துக்குள்ளாக 80 சதவீத சார்ஜ் ஏறும் வசதி கொண்டதாக இருக்கும்.  ஒரு முறை முழுமையான சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கும் வகையில்மிக சிறப்பான பேட்டரி திறனை பெற்றதாக டார்க் டி6எக்ஸ் விளங்கும் வகையில் உள்ள பேட்டரியின் ஆயுட்கால வாரண்டி 80,000 கிலோமீட்டர் முதல் 1,00,000 கிமீ வரை அல்லது 3 முதல் 5 வருடங்கள் தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நீரால் எவ்விதமான பாதிப்பும் அடையாத வாட்டர் ப்ரூஃப் பாதுகாப்பை கொண்ட பேட்டரி 6 கிலோ வாட் மோட்டார் கொண்டு டியூப்லெர் ஸ்டீல் ஸ்வின்கிராம் இணைக்கப்பட்ட டெர்லிஸ் ஃபிரேம் பெற்றதாக வரவுள்ளது.  முன்பக்கத்தில் டெஸ்கோபிக் ஃபோர்க்குடன் கூடுதலாக டிஸ்க் பிரேக் ஆப்ஷனை டயரில் பெற்றுள்ளது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் , ரியர் டிஸ்க் பிரேக்கை பெற்றுள்ளது. மேலும் அடிப்படை பாதுகாப்பு அம்சமாக சிபிஎஸ் பிரேக்கை கொண்டுள்ளது.

Tork T6X Spied

T6X பைக்கில் யூஎஸ்பி சார்ஜர் , ஆன்போர்டு நேவிகேஷன் ,ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆப்ஸ் தொடர்பு போன்றவற்றுடன் இந்த பைக்கில் ரைடிங் மோட்கள் இடம்பெற்றிருக்கலாம்.

ஒரு கிலோமீட்டர் பயணிக்க ரூ 0.20 பைசா மட்டுமே எடுத்துக்கொள்ளும் என்பதனால் முழுமையான சார்ஜ் செய்வதற்கான கட்டண அளவு ரூ.15 -20 வரை மட்டுமே ஆகும். முதன்முறையாக புனேவில் இரு சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில வருடங்களில் நாடு முழுவதும் 100 மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அல்லது 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் டார்க் T6X எலக்ட்ரிக் பைக் ரூ. 1.50 லட்சத்தில் விற்னைக்கு வெளியாகலாம்.

Tork T6X spied Side Profilespy image source-zigwheels