டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ கூடுதல் பாதுகாப்பு வசதி அறிமுகம்

0

TVS Scooty pep Gold

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ மாடலின் 25 ஆண்டுகால வரலாற்றை கொண்டாடும் வகையில் லோகோ பதிக்கப்பட்டு கூடுதலாக சிபிஎஸ் எனப்படுகின்ற சிங்க்ரோய்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் 125சிசி க்கு குறைந்த மாடல்களில் சிபிஎஸ் பிரேக் , ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் 125சிசி க்கு மேற்பட்ட மாடல்களில் பொருத்தப்பட்டு விற்பனைக்கு செய்வது கட்டாயமாகும்.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ சிறப்புகள்

இந்திய சந்தையில் இன்றைக்கும் சிறந்த ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக குறைந்த விலை கொண்ட ஸ்கூட்டி பெப் பிளஸ்  87.8 சிசி என்ஜினை கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றது. 25 ஆண்டுகால பேட்ஜ் உடன் புதிதாக சிவப்பு மற்றும் தங்கம் நிறம் இணைக்கப்பட்டு முந்தைய நிறங்களான பிரவுன், பர்பிள், பிளாக், பிங்க், நிறத்தில் கிடைக்கின்றது.

4.9hp குதிரைத்திறன் மற்றும்  5.8Nm முறுக்கு விசை வெளிப்படுத்தும் 87.8 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த எடையைவ பெற்ற ஸ்கூட்டர் மாடலாக 95 கிலோ மட்டும் பெற்றுள்ளது.

சிபிஎஸ் எனப்படுகின்ற கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டத்தை டிவிஎஸ் நிறுவனம்  சிங்க்ரோய்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் என அழைக்கின்றது. இந்த கூடுதல் பாதுகாப்பு வசதி மூலம் பிரேக்கிங் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 45 லட்சத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டதாக மிகவும் வலுவான சந்தை மதிப்பை கொண்டுள்ளது.